‘நீட்’ வினாத்தாள் கசிவு எதிரொலி: புதுடில்லி தேசியத் தேர்வு முகமை அலுவலகத்துக்கு சி.அய்.எஸ்.எஃப். பாதுகாப்பு

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி செப்.28 நீட் வினாத்தாள் கசிவு மற்றும் யுஜிசி நெட் தேர்வு குளறுபடிகளைத் தொடர்ந்து, புதுடில்லியில் உள்ள தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) புதிய அலுவலகத்துக்குக் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஅய்எஸ்எஃப்) பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நீட், யுஜிசி நெட், ஜேஇஇ உள்ளிட்ட முக்கியத் தேர்வுகளை என்டிஏ நடத்தி வருகிறது. அண்மையில் எழுந்த கடும் விமர் சனங்கள் மற்றும் சர்ச்சைகளைத் தொடர்ந்து, நிலைமையைச் சீர்படுத்த ஒன்றியகல்வி அமைச் சகம் பல்வேறு தீவிர நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, டில்லி ஓக்லா பகுதியில் இயங்கி வந்த என்டிஏ அலுவலகம், மின்டோ சாலையில் உள்ள ஒன்றிய அரசு அச்சகக் கட்டடத்துக்கு மாற்றப் பட்டு வருகிறது. இக்கட்டடத்தின் 5-ஆவது தளம் முழுமையாகவும், 4 மற்றும் 6-ஆவது தளங்களின் சில பகுதிகளும் என்டிஏவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒரு மாதத்தில் தேர்வு தொடர்பான ரகசிய மற்றும் முக்கியமான பணிகள் புதிய அலு வலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இங்கு ரகசியப் பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, அங்குள்ள பணிகள் மற்றும் ஆள்நடமாட்டம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

என்டிஏ அலுவலக வளாகத் துக்குப் பாதுகாப்பு அளிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, 39 சிஅய் எஸ்எஃப் வீரர்கள் பாது காப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளைக் கண்காணித்து, ரகசியப் பகுதிகளுக்குள் அனுமதி இன்றி யாரும் நுழைவதைத் தடுக்கும் பணியை இவர்கள் மேற் கொண்டு வருகின்றனர். இக்கட் டடத்தின் பிற பகுதிகளுக்கு ஏற்ெகனவே சிஅய்எஸ்எஃப் பாது காப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *