தேர்வு முறைகேடு விவகாரம்: மக்கள் போராட்டத்தைத் திசை திருப்ப பிரதமர் மோடி எடுத்த 7 அவசர நடவடிக்கைகள் – எழுந்த சர்ச்சைகள்!

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஜூலை 28 நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்வு முறைகேடு விவகாரம், மாணவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. தீவிரமடைந்து வரும் போராட்டங்களைக் கட்டுப் படுத்தவும், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவும் ஒன்றிய அரசும், பிரதமர் மோடியும் அடுத்தடுத்து 7 முக்கிய அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

மாணவர்களின் எழுச்சியால் இலங்கை, பங்க ளாதேஷ் மற்றும் நேபாளம் போன்று ஆட்சி மாற்றச் சூழல் ஏற்பட்டு விடுமோ என்ற உளவுத்துறை அறிக்கையைத் தொடர்ந்து ஒன்றிய அரசு இந்நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகப் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

பிரதமர் மோடி எடுத்ததாகக் கூறப்படும் 7 அவசர நடவடிக்கைகள்:

சோனம் வாங்சுக் கைது / கஸ்டடி

ஆரம்பத்தில் மாணவர்கள் போராட்டத்தின் முக்கிய குரலாக இருந்த சோனம் வாங்சுங்கை அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதன் மூலம் கூட்டம் கலைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

முதல் சமூக வலைதளப் பதிவு

கைது நடவடிக்கைக்குப் பிறகும் போராட்டம் ஓயா ததால், நிலைமையைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘முதலைக்கண்ணீர் வடித்து’ முதல் பதிவை வெளியிட்டார்.

காட்சிப் பதிவுகள் வெளியீடு

சமூக வலைதளப் பதிவு பலனளிக்காத நிலையில், உணர்ச்சிப்பூர்வமாகப் பேசி இரண்டு காட்சிப் பதிவுகளை வெளியிட்டு நிலைமையைச் சமாளிக்க முயற்சித்தார்.

இணைய சேவை முடக்கம்

பெரும்பாலன நகரங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இணைய சேவை முடக்கப்பட்டது. இணையத்தை முடக்கிவிட்டு பிரதமர் யாருக்காக காட்சிப் பதிவு வெளியிடுகிறார் என்று மாணவர்கள் தரப்பில் பலத்த கேள்விகள் எழுப்பப்பட்டன.

கல்வித்துறைச் செயலாளர் மாற்றம்

போராட்டத்தின் வீரியத்தைக் குறைக்க, கல்வித்துறைச் செயலாளரை அதிரடியாக மாற்றம் செய்து அரசு புதிய வித்தையைக் காட்டியது.

பணியிடை நீக்கம்

தேசிய தேர்வு முகமைக்குழுவைச் சேர்ந்த 47 உறுப்பினர்கள் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும், இவர்கள் அனைவரும் ஏற்கெனவே அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி அமைச்சர் பதவி நீக்கம் – சீர்திருத்தக் குழு அமைப்பு

போராட்டம் உச்சத்தை எட்டிய நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, கல்வி அமைப்பில் மாற்றங்களைச் செய்ய உயர்மட்டத் ‘‘தேர்வு சீர்திருத்தக் குழு’’ ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது.

தேர்வு சீர்திருத்தக் குழுவில்
‘கோமிய’ சர்ச்சை

ஒன்றிய அரசு அமைத்துள்ள இந்த புதிய தேர்வு சீர்திருத்தக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக சென்னை அய்.அய்.டி. இயக்குநர் வி.காமகோடி நியமிக்கப்பட்டுள்ளது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

பசு மாட்டு மூத்திரம் குடித்தால் காய்ச்சல் குணமாகுமாம்
மோடி அமைத்த தேர்வு சீர்திருத்தக் குழு உறுப்பினரின் லட்சணம்!

கடந்த ஆண்டு (2025) மாட்டுப் பொங்கல் தினத்தன்று பேசிய அய்.அய்.டி. இயக்குநர் காமகோடி, ‘‘என் தந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபோது, சன்னியாசி ஒருவர் கொடுத்த கோமியத்தைக் குடித்த 15 நிமிடங்களில் காய்ச்சல் சரியானது. பசு மாட்டு மூத்திரத்தில் கிருமி நாசினிகள் மற்றும் நன்மைகள் செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன’’ என்று கூறியிருந்தார்.
நாட்டின் முதன்மையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராக இருப்ப வரே, அறிவியல் சான்றுகள் அற்ற முறையில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பேசியது அப்போது கடும் எதிர்ப்பை சந்தித்தது. அலோபதி மருத்துவமோ அல்லது பன்னாட்டு மருத்துவ அமைப்புகளோ கோமியம் குடிப்பதை அங்கீகரிக்காத சூழலில், இத்தகைய கருத்துகளைத் தெரிவித்தவரை நாட்டின் முக்கிய கல்விச் சீர்திருத்தக் குழுவில் நியமித்திருப்பது, ‘‘மூடநம்பிக்கையில் உழல்பவர்களைக் கொண்டு கல்வி சீர்திருத்தம் செய்ய முற்படுவதா?’’ என்றக் கேள்வியையும், கொந்த ளிப்பையும் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *