திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க. கூட்டணியின் என்சிபிஅய்யில் இணைந்த 20 எம்.பி.க்களுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஆக. 27- திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகிய 20 எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்கும்படி 20 எம்.பி.க்களுக்கும் உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்தது. இதில், பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து திரிணாமூல் காங்கிரஸின் 20 எம்.பி.க்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகி, தேசிய குடிமக்கள் கட்சியில் (என்சிபிஅய்) இணைந்தனர்.

இது தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், “திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுதீப் பந்தோபாத்யாய், காகோலி கோஷ் தஸ்திதார் உள்ளிட்ட 20 எம்பிக்கள் கட்சியிலிருந்து பிரிந்து என்சிபிஅய் கட்சியில் சேர்ந்துள்ளனர்.

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி இவர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்,” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்‌ஷி, வி.மோகனா அமர்வு முன்பு நேற்று முன்தினம் (25.8.2026) விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “இந்த மனு குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி 20 எம்.பி.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. மேலும், தகுதி நீக்க விவகாரத்தில் மக்களவைத் தலைவர் எடுத்த நடவடிக்கை குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *