திருச்சி, செப்.28–- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ‘தொழில் நுட்பக் கழகம்’ (Technology Club) சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விவாதப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் பள்ளி வளாகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
இப்போட்டிகளைப் பள்ளிப் பொறுப்பாசிரியர் பாக்கியலட்சுமி முன்னின்று ஒருங்கிணைத்து வழிநடத்தினார். “தற்காலத் தொழில் நுட்பம் – நன்மையா? தீமையா?” (Recent Technologies – Good or Bad) என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதப் போட்டியிலும், மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியிலும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது கருத்துத் திறனை வெளிப்படுத்தினர்.
நிகழ்வின் நிறைவில் பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா தலைமை வகித்து, போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார்.
வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம்:
விவாதப் போட்டி:
என். சரவண குமார் (ஒன்பதாம் வகுப்பு – ‘சி’), பி. சாயிந்தவி (பத்தாம் வகுப்பு – ‘டி’), எம். அகமது ரயான் (எட்டாம் வகுப்பு – ‘ஏ’), எஸ்.அஹ்சன் (எட்டாம் வகுப்பு – ‘சி’)
பேச்சுப் போட்டி:
எம்.மகிழினி (ஏழாம் வகுப்பு – ‘ஏ’)
வி.ஹரிஷ் (ஆறாம் வகுப்பு – ‘பி’)
இ. தருண் ஜாஸ் (ஆறாம் வகுப்பு – ‘சி’)
இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர் களை வாழ்த்தினர்.
