தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை குற்றம் சாட்டப்பட்ட நபராக விசாரிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, செப். 26- ஒரு சாதாரண குற்றம்சாட்டப்பட்ட நபர் விவகாரத்தில் நடப்பதைப் போல, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் காவல் துறை விசாரணை, ஆதாரங் களை சேகரித்தல், நீதிமன்ற விசா ரணை ஆகியவை நடைபெற வேண் டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்குரைஞர் சந்த் குரேஷி சார்பில், உச்ச நீதிமன்ற வழக்குரை ஞர் சைலேந்திர மணி திரிபாதி தாக்கல் செய்த மனுவில், ‘செய்தித்தாளில் ஞானேஷ் குமார் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக் களுக்கும் அவரது அதிகாரப்பூர்வ பொறுப்புக்கும் இடையே எந்த ஒரு நியாயமான தொடர்பும் இல்லை.

செய்தச் செயலுக்கும் அதிகாரப் பூர்வ கடமைக்கும் இடையில் தர்க்க ரீதியிலான, சட்ட ரீதியிலான தொடர்பு இல்லாது போகும்போது, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள்கள் சட்டம் 2023-இன் பிரிவு 16-இன் கீழ் வழங்கப்படும் சட்டப்பூர்வ பாது காப்பு முற்றிலும் பயனற்றதாக ஆகி விடுகிறது.

நாடாளுமன்ற சட்டத்தின்படியோ அல்லது சட்டத் திருத்தத்தின்படியோ அல்லாமல், புதிய வாக்காளர்களை இணைக்கும் படிவம் 6 திருத்தப் பட்டுள்ளது. மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்கள் மற்றும் மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரியின் அங்கீகாரம் இல் லாமல், இது நடந்துள்ளது. இந்த ஒரு தலைப்பட்சமான நடவடிக்கை காரணமாகவும், மென்பொருள் கோளாறுகள் காரணமாகவும் பலரது வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

அலுவல் ரீதியாக கடமைகளை நிறைவேற்றும்போது வேண்டுமென்றே ஆவணங்களைத் திருத்துவது, போலி ஆவணங்களை உருவாக்குவது அல்லது அரசியலமைப்புக்கு உட்பட்ட தேர்தல் செயல்முறையைச் சீர்குலைப்பது போன்றவை கடமை யின் ஓர் அங்கமாகவோ அல்லது இயல்பான ஒன்றாகவோ கருத முடியாது. ஒரு பொது ஊழியர் என்ற தகுதி மட்டுமே, தீய நோக்கத்து டனான செயல்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அல்லது பாதுகாப்பை அளித்துவிடாது.

அரசியலமைப்புச் சட்டக் கண்ணோட்டத்தில் மத்திய தேர்தல் ஆணையத்துக்கு குற்ற வியல் வழக்குகளில் இருந்து விலக்குரிமை எதுவும் இல்லை. அரசியலமைப்பின் 361-ஆவது பிரிவின் கீழ், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு மட்டுமே அவர்களின் பதவிக் காலத்தில் குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் கைது நடவடிக்கைகளில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பிரிவு 324, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பதவிக் காலப் பாதுகாப்பை மட்டுமே வழங்குகிறது. தனிப்பட்ட குற்றவியல் பொறுப்புகளில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டே செயல்படுகிறது. அது தனக்கென்று தனிச் சட்டங் களை வகுத்துக்கொண்டு செயல்படும் அமைப்பு அல்ல.

2023-ஆம் ஆண்டு சட்டத்தின் 16-ஆவது பிரிவில், காவல் துறை விசாரணைக்கோ அல்லது கைது நடவடிக்கைக்கோ எதிரான எவ்வித தடையும் வெளிப்படையாகக் குறிப் பிடப்படவில்லை. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற அரசியலமைப்பு ஆணையை மீறும் வகையில் வாக்காளர் பட்டியல்களை வேண்டுமென்றே மாற்றி அமைக்கும்போது, அதைச் செய்தவருக்கு சட்டப் பாதுகாப்பு பொருந்தாது’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *