கழகக் களத்தில்…!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

1.10.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2617

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: எழுத்தாளர் கோ.பிச்சைவள்ளிநாயகம் (துணைத் தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைப்பு: பழமொழிகள் (தமிழனின் பழங்கள் – ஒரு பார்வை)  * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த் தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

3.10.2026 சனிக்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி கரூரில் மினி மாரத்தான் போட்டி

கரூர்: பதிவுக்கட்டணம் – 300, கடைசி நாள் – 28.9.2026 *இடம்: கரூர் திருமாநிலையூர் தந்தை பெரியார் சிலை, ரவுண்டானா *கலந்து கொள்ளும் அனைவருக்கும் டி-சர்ட், சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும் *ஏற்பாடு: திராவிடர் கழகம் மற்றும் தோழர் களம், கரூர் மாவட்டம் *தொடர்புக்கு: 81247 55806, 93445 93400.

நாகப்பட்டினம் மாவட்ட கழகம் நடத்தும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொள்கை குடும்பங்கள் கூடுகை விழா

சோழங்கநல்லூர்: காலை 9 மணி *இடம்: வெள்ளை மாளிகை, சோழங்கநல்லூர் *சிறப்பு விருந்தினர்கள்: தஞ்சை இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிடர் மாணவர் கழகம்) *நிகழ்வில்: திண்டுக்கல் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி மற்றும் குழந்தைகளுடன் விளையாட்டுப் போட்டிகள், பல்சுவை நிகழ்ச்சிகள் இவற்றுடன் சிறப்பு விருந்து கொள்கை உறவுகளே! வாரீர்! வாரீர்!!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *