கழகக் களத்தில்…!

இணையவழி கையெழுத்து இயக்கம்

29.8.2026 சனிக்கிழமை
லால்குடி மாவட்ட கழகக்
கலந்துரையாடல் கூட்டம்

லால்குடி: மாலை 6 மணி *இடம்: பெரியார் திருமண மாளிகை, லால்குடி * தலைமை முனைவர் வீ.அன்புராஜா (லால்குடி மாவட்டத்தலைவர்) * முன்னிலை: தே.வால்டேர் (லால்குடி மாவட்டக் காப்பாளர்), ப.ஆல்பர்ட் (லால்குடி மாவட்டக் காப்பாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) *  பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, இளைஞர் அணி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பிரச்சாரப் பணிகள் * வேண்டல்: கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * அழைப்பு: ஆ.அங்கமுத்து (லால்குடி மாவட்டச் செயலாளர்) * ஏற்பாடு: லால்குடி கழக மாவட்டம்.

30.8.2026 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதைச் சுடரொளி வை.நடேசன், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள்  விழா – கழக தெருமுனைக் கூட்டம்

மேலத்திருப்பாலக்குடி: மாலை 6.30 மணி *இடம்: கலைஞர் அறிவாலயம் அருகில், மேலத்திருப்பாலக்குடி *வரவேற்புரை: ந.இந்திரஜித் (ப.க.) *தலைமை: ந.இன்பக்கடல் (மாவட்டத் துணைத் தலைவர்) *முன்னிலை: சு.கிருஷ்ணமூத்தி (மாவட்டச் செயலாளர்), கோ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்), சி.ரமேஷ் (மாநில அமைப்பாளர்) *தொடக்கவுரை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டக் கழகத் தலைவர்) *சிறப்புரை:
இராம.அன்பழகன் (கழகச் சொற்பொழிவாளர்) *நன்றியுரை: ஜெ.அருளரசன் (ப.க.).

தூத்துக்குடி மாவட்ட கழக, பகுத்தறிவாளர்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி: காலை 10 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி *தலைமை: மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்), ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர், ப.க.) *முனினிலை: இரா.முத்து கணேஷ் (மாநில அமைப்பாளர், ப.க.) *பொருள்: தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகம் 12.9.2026 அன்று நடத்தும் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, 17.9.2026 அன்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடுதல், களப்பணியாளர்களைத் தெரிந்தெடுத்தல் *விளக்கவுரை: மா.பால்ராசேந்திரம் (மாவட்டக் கழகக் காப்பாளர்) *நன்றியுரை: கோ.முருகன் (மாவட்டக் கழகச் செயலாளர்) *ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி.

கிருட்டினகிரி மாவட்ட கழகப்
பொறுப்பாளர்கள்  கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி: மாலை 3.00 மணி *இடம்: இடம்:  பெரியார் மய்யம், கிருட்டினகிரி * தலைமை:
கோ. திராவிடமணி  மாவட்டத் தலைவர் * வரவேற்புரை: செ.பொன்முடி  மாவட்டச் செயலாளர் *முன்னிலை: பழ.பிரபு (கழகக் காப்பாளர்), தி.கதிரவன் (மாவட்ட துணைத் தலைவர்) *கருத்துரை: அண்ணா. சரவணன் (மாநில துணைப்பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *நன்றியுரை: சி.சீனிவாசன் மாவட்ட துணைச் செயலாளர் *பொருள்: அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 148 – ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் கழக ஆக்கப்பணிகள்  * கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில்   பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்  * இவண்: மாவட்ட திராவிடர் கழகம், கிருட்டினகிரி மாவட்டம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *