காவிரி வழக்கில் இறுதித் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி கருநாடகத்தைச் சேர்ந்த அமைப்பு தாக்கல் செய்த மனு – உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, செப்.24- காவிரி வழக்கில் கூறப்பட்ட இறுதி தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

காவிரி நதி ரட்சிண சமிதி

காவிரி வழக்கில் கூறப்பட்ட இறுதித் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய உச்சநீதிமன்றத்தில் கருநாடகத்தைச் சேர்ந்த காவிரி நதி ரக்ஷிண சமிதி என்ற அமைப்பு சார்பில் வழக்குரைஞர் அசோக்லேகர் குருதத்தா தாக்கல் செய்த ரிட் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தற்போதைய காவிரி நீர் பங்கீட்டில் தவறுகள் உள்ளதால், தமிழ்நாட்டின் பங்கீட்டில் இருந்து 70.91 டி.எம்.சி. நீரை கருநாடகத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் இருப்பு 20 டி.எம்.சி. என குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெங்களூருவின் மக்கள் தொகை மற்றும் தொழில் துறை தேவைகளுக்கு 7.5 டி.எம்.சி. மட்டுமே ஒதுக்குவது போதாது. கருநாடகத்தின் பாசனத் திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதில், மேலும் 1.85 லட்சம் ஏக்கரில் இரண்டாவது பருவப் பயிர் சாகுபடி செய்யக் கூடாது. கருநாடகாவுக்கு 23.97 டி.எம்.சி. நீர் தவறாக மறுக்கப்பட்டுள்ளது.

கருநாடகாவில் உள்ள 320 கி.மீ.காவிரி ஆற்றுப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மேலும் 5 டி.எம்.சி. கோரிடுவதோடு, கடலில் வீணாகக் கலக்கும் நீரில் 2 டி.எம்.சி.யை கருநாடகா தங்க வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

மழைப்பொழிவுக்கு ஏற்ப செயல்படும் அறிவியல்பூர்வமான சூத்திரத்தின் மூலம் பற்றாக்குறை மற்றும் உபரி ஆண்டுகளை நிர்வகிக்கக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழிகாட்டல்களை உருவாக்க வேண்டும்.

காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் ஒழுங்குமுறை அதிகாரங்களை குறைக்க வேண்டும். அது உத்தரவுகளை பிறப்பிக்கவோ அல்லது மாநிலங்களின் நீர்த்தேக்க செயல்பாடுகளில் தலையிடவோ கூடாது. விளி யுக அட்டவணையை தற்போதைய 15 ஆண்டு கால வரம்பிற்குப் பதிலாக ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் மறு ஆய்வு செய்ய வேண்டும்.

காவிரி நீர் மேலாண்மை வாரியம் மற்றும் மத்திய ஒன்றிய நீர் சக்தி அமைச்சகம் ஆகியவை நீர்ப் பகிர்வு பாசன மாநிலங்களுடன் கலந்தாலோசித்து பிறகே எதிர்கால செயல்பாட்டு நெறிமுறைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த ரிட் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, “இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான தகராறுகள் குறித்து சங்கங்கள் தாக்கல் செய்யும் மனுக்களை நாங்கள் விசாரிக்கத் தொடங்கினால் அதற்கு முடிவே இருக்காது” என்று நீதிபதிகள் குறிப்பிட்டு காவிரி நதி ரக்ஷிண சமிதி மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், இந்த மனுவை தள்ளுபடி செய்வதற்கு முன்பு, மாநிலங்கள் ஏற்கெனவே இதுதொடர்பாக வாதிட்டு வருவதையும், வழக்குகள் நிலுவையில் இருப்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *