இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவோர் எண்ணிக்கை 576 நாடாளுமன்றத்தில் தகவல்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஜூலை 28- நாடாளுமன்றத்தில் நேற்று (27.7.2026) எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கடந்த அய்ந்து மதிப்பீட்டு ஆண்டுகளில் வருமான வரி கணக்குத் தாக்கலில் ரூ.100 கோடி அல்லது அதற்கும் அதிகமான மொத்த வருமானத்தைக் குறிப்பிடும் தனிநபர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த 2021-2022ஆம் நிதியாண்டில் 100 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியவர்கள் எண்ணிக்கை 142ஆக இருந்தது. 2022-2023 மதிப்பீட்டு ஆண்டில் இந்த எண்ணிக்கை 301ஆகவும், 2023-2024-இல் 284ஆகவும், 2024-2025-இல் 415ஆகவும் இருந்தது, 2025-2026இல் இது 576ஆக உயர்ந்துள்ளது.

வருமான வரிச் சட்டம், 2025 அல்லது முந்தைய வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ் பில்லியனர் என்ற சொல்லுக்கு சட்டரீதியான வரையறை எதுவும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய அமைச்சர், வருமான வரி கணக்குத் தாக்கல்கள் மூலம் ரூ.100 கோடி அல்லது அதற்கும் அதிகமான மொத்த வருமானத்தைக் குறிப்பிடும் தனிநபர்களை அரசு கண்காணித்து வருவதாகவும் கூறினார். செல்வ வரிச் சட்டம் 1957, கடந்த 2016 ஏப்ரல் 1 முதல் ரத்து செய்யப்பட்டதால், பில்லியனர்களின் மொத்தச் சொத்து குறித்த தரவுகளை அரசு பராமரிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அண்மைய குடும்ப நுகர்வுச் செலவு ஆய்வின் (2023-2024) படி, கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் வருமான ஏற்றத்தாழ்வு குறைந்துள்ளது. இதன் மூலம் நாட்டில் பெரும் செல்வந்தர்களின் (100 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்கள்) எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 4 மடங்கு கணிசமாக அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *