சமூக நீதி நடை, குடும்ப விருந்து, கழக நூல் பரப்புரையை எழுச்சியோடு நடத்திடுவோம்! கும்பகோணம் கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கும்பகோணம், செப். 22- 14.9.2026 அன்று மாலை 6 மணிக்கு கும்பகோணம் பெரியார் மாளிகையில். மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப் பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தலைமை வகித்து கூட்டத்தின் நோக் கங்களை விளக்கி பேசினார்.

மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மாவட்டச் செயலாளர் சு.துரைராசு, ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

குடந்தை மாநகரத் தலைவர் பேராசிரியர் க.சிவக்குமார், கடவுள் மறுப்புக் கூறி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

தொடர்ந்து மாவட்டக் காப்பாளர் வை.இளங்கோவன், மாநில எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர் குடந்தை க.குருசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஆ.தமிழ்மணி, மாவட்ட மகளிர் அணி தலைவர் மு.திரிபுரசுந்தரி, மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் பீ.இரமேஷ், தொழிலாளர் அணி தலைவர் த.ஜில்ராஜ், குடந்தை ஒன்றியத் தலைவர் கோவி.மகாலிங்கம், பாபநாசம் ஒன்றியச் செயலாளர் ச.கலியமூர்த்தி, வழங்கை ஒன்றிய செயலாளர் சி.இராமச்சந்திரன், செல்வராசன், ரியாஸ், சேகர், இராதாகிருஷ்ணன், சேக்கிழார், பவானி சங்கர், ராணி குருசாமி, ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

தொழிலாளர் அணி மாவட்ட துணைச் செயலாளர் அ.சங்கர், இறுதியாக நன்றி கூறினார்.

கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செப்டம்பர்-3 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானத்தினை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

செப்டம்பர் -27 கும்பகோணத்தில் பெரியார் கொள்கை குடும்பங்கள் சந்திப்பு ஒன்று கூடல் (குடும்ப விருந்து)

அக்டோபர்-3 கும்பகோணம் கழகமாவட்டம் சார்பில் “பெரியார் கேட்கும் கேள்வி ” புத்தகம் பரப்புரை செய்தல்.

மேற்கண்ட நிகழ்வுகளை கும்பகோணம் கழக மாவட்டத்தில் வெகு சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *