ஆண்டிப்பட்டி, ஜூன் 3- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகர் திராவிடர் கழகம் சார்பாக 31/05/2026 அன்று ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் 93 – பிறந்தநாள் மகிழ்வாக அவசரத் தேவைக்கான குருதிக்கொடை முகாம் நடைபெற்றது
நிகழ்வில் முதல் குருதி கொடுத்து துவக்கி வைத்தவர் ஆண்டிபட்டி தந்தை பெரியார் குருதிக் கொடை கழகத் தலைவர், தேனி மாவட்ட கழகத் துணைத் தலைவர் ஸ்டார்.சா.நாகராசன், நகர் கழகச் செயலாளர் இரா. ஆண்டிச்சாமி, செ.கண்ணன் மற்றும் பெண்கள், இளைஞர்கள், பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர் இதில் தகுதியுள்ள 40 குருதிக் கொடையாளர்களிடம் சேகரித்த யூனிட்களை பெரியகுளம் அரசு மருத்துவமனை குருதி வங்கிப் பொறுப்பாளர் மனிதநேய மருத்துவர் த.பாரதி மருத்துவக் குழுவினரிடம் வழங்கப்பட்டது.
உடன் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை பொறுப்பாளர் மருத்துவர் க.பிரேமலதா, தேனி மாவட்ட உலக அமைதி குழு 10 ருபீஸ் இரா.ஜெயபாலன், அனைத்து மக்களின் நட்பை பெற்ற பெ.ஆண்டனி, கோடாங்கி பட்டி மனிதநேய காப்பக இளைஞர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
ஆண்டிபட்டியில் மனிதநேய விழா… தமிழர் தலைவர் ஆசிரியர் 93ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக குருதிக்கொடை முகாம்
Leave a Comment
