இந்திய அரசியலின் மய்யப் புள்ளியைத் தீர்மானித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் கழக துணைப் பொதுச் செயலாளர் புகழாரம்

3 Min Read

திராவிடர் கழகம்

புதுச்சேரி, ஜூன் 10– திமுகவை எதிர்த்தவர்கள் எல்லாம் இறந்து விட்டனர். ஆனால் திமுக நின்று கொண்டு தான் இருக்கிறது. இந்திய அரசியலின் மய்ய புள்ளியை தீர்மானித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்று கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாவட்ட கழக சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு “திராவிடர் எழுச்சி நாள்” பொதுக்கூட்டம் புதுச்சேரி சுதேசி மில் அருகே 05-06-2026 மாலை நடைபெற்றது.

புதுச்சேரி மாவட்ட கழக தலைவர் வே.அன்பரசன் தலைமை ஏற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் தி.இராசா அனைவரையும் வரவேற்றார்.

மாவட்டக் கழக காப்பா ளர்கள் இரா.சடகோபன், இர.இராசு, மாநிலப் பகுத்தறி வாளர் எழுத்தாளர் மன்ற துணை செயலாளர் வி.இளவரசி சங்கர், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கு.இரஞ்சித் குமார், பொதுக்குழு உறுப்பினர் கள் விலாசினிராசு,கி.அறிவழகன், தொழிலாளரணித் தலைவர் வீர.இளங்கோவன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன் ஆகி யோர் முன்னிலை வகித்து சிறப்பு செய்தனர்.

மக்கள் நீதி மய்ய மாநிலப் பொதுச்செயலாளர் இராம.சந்திரமோகன், தே.மு.தி.க மாநிலக்கழக செயலாளர் வி.பி.பி.வேலு, எஸ்.டி.பி.அய்.மாநிலத் தலைவர் ப.அப்துல்லா, ம.தி.மு.க.அமைப்பாளர் கபிரியேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் பெ.அரிமாத் தமிழன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (எம்) மாநிலச் செயலாளர் சு.இராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் அ.மு.சலீம், புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா ஆகியோர் வாழ்த்துரை வழங்கிய உரையாற்றினர்.

நிகழ்ச்சியில், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஏ.எம்.எச்..நாஜிம், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.செந்தில்குமார், வே.கார்த்திகேயன், விக்னேஷ் கண்ணன் உள்ளிட்ட தலை வர்கள் கலந்து கொண்டனர். முத்தமிழறிஞர் கலைஞரின் அரசியல் பயணம், தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய பங்களிப்புகள், சமூகநீதி மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகள், கல்வி மற்றும் நலத்திட்டங்களில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனை கள் குறித்து விரிவாக எடுத்து ரைத்தனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக சட்ட மன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.எம்.எச்.நாஜிம், இரா.செந்தில்குமார், வே.கார்த்திகேயன், விக்னேஷ் கண்ணன் ஆகியோருக்கு “தந்தை பெரியார் சிலை” அளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய திரா விடர் கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, திராவிட இயக்க வளர்ச்சியில் கலைஞரின் பங்கு, அவரது எழுத்தாற்றல், நிர்வாகத் திறன் மற்றும் தமிழ்நாடு அரசியலில் அவர் பதித்த அழியாத முத்திரை குறித்து பேசப்பட்டதுடன், இன்றைய தலைமுறையினர் கலைஞரின் சிந்தனைகளையும் கொள்கைகளையும் பின் பற்ற வேண்டும் என்றும் வலி யுறுத்தினார். மேலும் பேசிய அவர், ஒரு சிலர் கலைஞர் குறித்து அவதூறு பேசுகின்றனர். ஆனால் அவர்கள் பிறப்பதற்கு முன் கோபாலபுரத்தில் தன் சொந்த உழைப்பில் வீடு வாங்கியவர் கலைஞர். நின்று நிதானமாக பேசுவதற்கு கொள்கை தேவை, அரசியல் புரிதல் தேவை, வரலாறு தேவை. ஆனால் அப்படி ஒன்றும் இல்லாதவர்கள் வீதியில் இறங்கி கத்திகொண்டு செல்ல வேண்டியதுதான். எங்களிடத்தில் கொள்கை இருக்கிறது, அரசியல் இருக்கிறது, தலைவர்கள் இருக்கிறார்கள். தலைவர்கள் மறைந்தாலும், அதை தூக்கி பிடிப்பதற்கு ஆயிரம் ஆயிரம் மதிவதனிகள் வந்துகொண்டே இருப்பார்கள். இந்த இயக்கம் வீழாது. அடிக்கிற காற்றில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதனைத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் விரைவில் உணர்வார்கள்.

ஆட்சியில் இருப்பது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஆள்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான். காரணம் மகளிர் விடியல் பயணம், மகளிர் உதவித்தொகை, திருநெல்வேலி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தில் படித்த ஒரு மாணவன் இன்று அய்ஏஎஸ் தேர்ச்சி பெற்று கலெக்டராக பதவி ஏற்றுள்ளார். இந்தத் திட்டங்களை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் வயிற்றெரிச்சலால் கொண்டுவரப்பட்ட புராடக்ட் தான் (விஜய்) இன்று விற்பனை ஆகியுள்ளது. அந்தப் புராடக்ட்டின் ஆயுட்காலம் இன்னும் அய்ந்து மாதங்களில் காலாவதியாவிடும். திமுகவை எதிர்த்தவர்கள் எல்லாம் இறந்து விட்டனர். ஆனால் திமுக நின்று கொண்டுதான் இருக்கிறது. இந்திய அரசியலின் மய்ய புள்ளியை தீர்மானித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்றார். இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில், திக, திமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்பு பொறுப்பாளர்கள், கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக மாவட்டக் கழக துணைத்தலைவர் மு.குப்புசாமி நன்றி தெரிவி்த்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *