ஆஸ்திரேலிய மிஷனரி கொலையாளி தாரா சிங்கின் விடுதலை மனு நிராகரிப்பு! ஒடிசா அரசு நடவடிக்கை

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புவனேஷ்வர், செப்.19 1999-ஆம் ஆண்டு ஆஸ்தி ரேலிய மிஷனரி கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களை உயிருடன் கொளுத்திக் கொன்ற வழக்கில் கைதான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த தாரா சிங்கின் முன்கூட்டிய விடுதலைக் கோரிக்கை மனுவை ஒடிசா அரசு நிராகரித்துள்ளது.

(செப்டம்பர் 1999): தேவாலயம் ஒன்றுக்கு தீ வைத்த கும்பலை வழிநடத்தியதற்காக தாரா சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எரியும் கட்டடத்திலிருந்து தப்பிக்க முயன்ற கத்தோலிக்க பாதிரியார் அருள் தாஸ், அம்பு எய்து கொல்லப்பட்டார்.

முஸ்லிம் வியாபாரி ஷேக் ரஹ்மான் படுகொலை: துணி வியாபாரியான ஷேக் ரஹ்மானை அடித்து, தீவைத்து கொன்றதற்காக தாரா சிங்கிற்கு மற்றொரு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 1999 நவம்பர் 26 அன்று, 20-க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய கும்பலுடன் சேர்ந்து ரஹ்மானின் கைகளை வெட்டி, கோடாரியால் தாக்கியுள்ளார். பின்னர் அவரை கடைக்கு இழுத்துச் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தினர். உடல் அடையாளங்கள் தெரியாமல் இருக்க உடலும், அவரது கடையும் எரிக்கப்பட்டன. மேற்கு வங்கத்திற்கு மாடுகள் ஏற்றிச் சென்ற லாரிகளை மறித்து, மாடுகளை விடுவித்து லாரிகளுக்கு தீ வைப்பதை தாரா சிங் வழக்க மாகக் கொண்டிருந்தார். இவரின் தாக்குதலுக்கு இலக்கான அனைவரும் முஸ்லிம் லாரி ஓட்டுநர்கள் ஆவர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *