9-ஆம் வகுப்பில் மும்மொழித் திட்டம் கட்டாயமாம்! சிபிஎஸ்இ கொள்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு!

புதுடில்லி, ஆக. 6- ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மொழிகளைக் கற்பதை கட்டாயமாக்கி யுள்ள புதிய கொள்கையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020இன் (NEP 2020) பரிந்துரைகளுக்கு ஏற்ப, 2026–2027-ஆம் கல்வியாண்டு முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.

மாணவர்கள் கட்டாயமாக 3 மொழிகளைக் கற்க வேண்டும். அதே சமயம், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த 3ஆவது மொழிக்குத் தனித்தேர்வு நடத்தப்படாது என்றும் சிபிஎஸ்இ தெளிவுபடுத்தியிருந்தது.

சிபிஎஸ்இயின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் வழக்குகள் தொடரப்பட்டன.

தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இம்மனுக்கள் குறித்து அவசர முறையீடு செய்யப்பட்டது.

“புதிய கல்வியாண்டு ஏற்கெனவே தொடங்கிவிட்டது. ஆனால், 3ஆவது மொழியைக் கற்பிப்பதற்கு போதிய ஆசிரியர்களோ, பாடப்புத்தகங்களோ தயார் நிலையில் இல்லை. இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கும் பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளனர்.”

மனுதாரர்களின் வாதங்களைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், இந்த மனுக்களை அவசரமாக விசாரிப்பது குறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *