‘நீட்’ மறு தேர்வு எழுதிய கருநாடக மாணவிக்கு பெரும் அதிர்ச்சி 720க்கு வெறும் பதினொரு மதிப்பெண்கள் சட்டப் போராட்டம் நடத்த முடிவு

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

பெங்களூரு, ஜூலை 27 ‘நீட்’ மறுதேர்வில் 720 மதிப்பெண்களுக்கு வெறும் 11 மதிப்பெண்களே கிடைத்திருந்ததால் அதிர்ச்சி அடைந்த கருநாடக மாணவி, தனக்கு நியாயம் கிடைக்க வேண்டி சட்டப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்.

‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவ காரத்தால் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் நீட் தேர்வு எழுதிய ஒரு மாணவிக்கு அநியாயம் ஏற்பட்டு இருப்பதாக கருநாடகத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

அந்த மாணவி கரு நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஹானகல் டவுண் பகுதியில் வசித்து வரும் பிந்துசிறீ பவார் என்பவர் ஆவார். கடந்த மே மாதம் 3-ஆம் தேதி நீட் தேர்வு நடந்தது. அந்த தேர்வுவினாத்தாள் கசிந்ததால் அது ரத்து செய்யப்பட்டு, கடந்த மாதம் (ஜூன்) 22-ஆம் தேதி மறுதேர்வு நடந்தது.

இந்த மறுதேர்வை மாணவி பிந்துசிறீ எழுதி யிருந்தார். அண்மையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் அவருக்கு வெறும் 11 மதிப்பெண்களே கிடைத் தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தேர்வு முகமையிடம், தனது விடைத்தாள் நகலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

அவருக்கு, அவருடைய நீட் விடைத்தாள் நகல் கிடைத்தது. அதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அந்த விடைத்தாள் அவருடையது இல்லை என்றும், வேறொரு வருடைய விடைத்தாளில் தன்னுடைய தேர்வுக் கான பதிவு எண் எழுதப் பட்டு மோசடி செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி கதறி அழுதார். அவரை அவருடைய பெற்றோர் சமாதானப்படுத்தினர்.

இதையடுது அவர்கள் தொலைபேசிமூலமும், கைப்பேசி மூலம் தேசிய தேர்வு முகமையை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் பிந்துசிறீக்கு நியாயம் கிடைக்க வேண்டி சட்டப் போராட்டம் நடத்த அவர்களின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி பிந்துசிறீ கூறுகையில், ‘நான் தேர்வு எழுதிய பின்னர் வீட்டுக்கு வந்து விடை்களை சரி பார்த்தேன். அதன்படி பார்த்தால் எனக்கு 720 மதிப்பெண்களுக்கு 668 கிடைக்கவேண்டும். ஆனால் வெறும் 11 மதிப் பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதில் மோசடி நடந்துள்ளது என வேதனை தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *