பெரியார் பாலிடெக்னிக் மற்றும் அய்.சி.டி. அகாடமி இணைந்து நடத்தும் Cyber Security-Cisco பற்றிய ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சி

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

வல்லம், செப். 14- சைபர் உலகில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இணைய வழி அச்சுறுத்தல்கள் மற்றும் தரவு பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில், வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும், சென்னை அய்.சி.டி அகாடமியும் (ICT Academy) இணைந்து நடத்தும் இந்திய அரசின் தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பத் துறையின் மூலம் 07.09.2026 முதல் 11.09.2026 வரை நடைபெற்ற “Cyber Security-Cisco” என்ற தலைப்பிலான ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சியின் துவக்க விழா 07.09.2026 அன்று காலை 10.00 மணியளவில் பெரியார் பாலிடெக்னிக்கில் நடைபெற்றது.

பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து பேராசிரி யர்கள் கலந்து கொண்டனர்.

விழாவை துவக்கி வைத்து, பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கப.வெள்ளியங்கிரி தலைமையுரையாற்றும் போது Cyber Security துறையின் முக் கியத்துவம் இணைய வழி அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதன் அவ சியம் குறித்து எடுத்துரைத்தார்.

திட்ட வரைவுரையாற்றிய இக்கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா அவர்கள் கூறுகையில்  பயிற்சியின் செயல்பாட்டு திட்டத்தின் உள்ளடக்கங்களை விளக்கமாக எடுத்துரைத்தார். இதில், Introduction to Cyber Security,  Network Security,  Cyber Threads, Thread Deduction and Prevention, Cisco Security Technologies  மற்றும் Network Production ஆகிய தலைப்புகள் பற்றி விரிவாக எடுத்துத்தார்.

சிறப்புரையாற்றிய அய்.சி.டி. அகாடமியின் பயிற்றுநர்  எஸ்.ஏ.சையத் காஜா Cyber Security துறையில் நடைமுறை பயன்பாடுகள், தொழில்துறை சார்ந்த பயிற்சி அனுபவங்கள் மற்றும் தொழில்முறை வாய்ப்புகள் குறித்து விளக்கி பேசினார். ICT Academy-யின் Relationship Manager திரு. எம்.வெங்கடேஷ் உரையாற்றும்  போது ICT Academy –கல்லூரி இணைப்பு, கல்வி வளர்ச்சிக்கான அதன் பங்களிப்பு மற்றும் எதிர்கால பயிற்சி வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.

இக்கல்லூரியின் கணினியின் துறைத்தலைவர் த.பிரியதர்ஷினி நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவு பெற்றது.

இந்த 5 நாட்கள் பயிற்சி திட்டம் PPT sessions மற்றும் hands-on பயிற்சிகளுடன் சிறப்பாக நடத்தப்பட்டது. Cyber Security பற்றிய விளக்கங்கள் எளிய முறையிலும் தெளிவாகவும் வழங்கப்பட்டன. நடைமுறை பயிற்சிகள் மூலம் ஆசிரியர்கள் நேரடி அனுபவம் பெற்றனர். இந்த பயிற்சி திட்டம் அவர்களின் தொழில்நுட்ப அறிவு மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்கு பயனுள்ளதாக அமைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *