திருச்சி, செப்.3-பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் (Bharathiyar Day Games / Republic Day Sports), திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியர் தடகளப் பிரிவுகளில் பங்கேற்றுத் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய தேதி களில் நடைபெற்ற இப்போட்டி களில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ – மாணவியர் விறுவிறுப்புடன் களமிறங்கினர்.
இதில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களது அபாரத் திறனை வெளிப்படுத்திப் பதக்கங்களைக் குவித்துச் சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களின் விவரம்:
கே.தனிஷ்க் (11ஆம் வகுப்பு): 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான நீளம் தாண்டுதல் (Long Jump – Under 17 Boys) போட்டியில் 5.39 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கம் வென்றார்.
எஸ்.தனுஷ்யா (9-ஆம் வகுப்பு): 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான நீளம் தாண்டுதல் (Long Jump – Under 14 Girls) போட்டியில் முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கம் வென்றார்.
எஸ்.பி.ரிதன்யா (11-ஆம் வகுப்பு): 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான உயரம் தாண்டுதல் (High Jump – Under 17 Girls) போட்டியில் 1.30 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கம் வென்றார்.
டி.பி.அனுசிறீ (11ஆம் வகுப்பு): 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான நீளம் தாண்டுதல் (Long Jump – Under 17 Girls) போட்டியில் 4.66 மீட்டர் தூரம் தாண்டி இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சி.மதுசிறீ (12ஆம் வகுப்பு): 19 வய துக்குட்பட்ட மாணவி களுக்கான குண்டு எறிதல் (Shot Put – Under 19 Girls) போட்டியில் 6.99 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
தடகளப் போட்டி களில் பங்கேற்றுத் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த மாணவ-மாணவியரையும், அவர்களுக்குச் சிறந்த முறையில் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கோகுல் மற்றும் சவுமியா ஆகியோரைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வெகுவாகப் பாராட்டினர்.
