பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தஞ்சாவூர் ரோட்டரி கிளப்பின் சார்பாக 7.8.2026 அன்று ”தாய்ப்பால் விழிப்புணர்வுப் பேரணி” நடைபெற்றது. இதில் நமது பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர், துணைமுதல்வர், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் 80 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணியை தஞ்சாவூர் மாநகராட்சி துணைமேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இப்பேரணியானது தஞ்சாவூர் இரயில் நிலையத்தில் தொடங்கி அரசு மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் நிறைவு பெற்றது. இதில் தாய்ப்பாலின் மகத்துவம் மற்றும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு முழக்கமிட்டும் மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *