உலகளாவிய எரிசக்தி, உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்க தயார் ரஷ்ய அதிபர் புடின் உறுதி

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, செப்.13– உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பிற்குப் பங்களிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக அதிபர் புடின் தெரிவித்தார்.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற டில்லி வந்துள்ள அதிபர் புடின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரஷ்யா அ்ரோப்பிய நாடுகளை அச்சுறுத்தவில்லை, அதேபோல் அச்சுறுத்தப் போவதில்லை. அய்ரோப்பாவுடன் மோதலுக்கு ரஷ்யாவிற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

இரண்டாம் உலகப் போரின் விளைவாக அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டன. உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பிற்குப் பங்களிக்க ரஷ்யா தயாராக இருக்கிறது. பிரிக்ஸ் கூட்டமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல.

ரஷ்யா முழு உலகத்துடனும் இணைந்து செயல்படத் தயாராக உள்ளது; இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த விரும்புகிறேன். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா சுதந்திரமான மற்றும் இறையாண்மைமிக்க கொள்கையைக் கொண்டுள்ளது.

உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. உலகப் பொருளாதாரத்தில் ஜி7 நாடுகளின் பங்கு பல ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. இவ்வாறு ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *