ஒன்றிய பிஜேபி அரசின் ஓர வஞ்சனை! தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை திட்டங்களில் நான்கு திட்டங்களுக்கு தலா ஒரு ரூபாய் மட்டுமே ஒதுக்கீடாம்! ஆர்.டி.அய். மனுவில் பதில்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 12- தமிழ் நாட்டில் நடைபெறும் 10 புதிய ரயில் பாதை திட்டங்களில், 4 திட்டங்களுக்கு தலா ஒரு ரூபாய் மட்டுமே ஒதுக்கி இருப்பது
ஆர்.டி.அய் மூலமாக பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

இதுதவிர, இரட்டை பாதை திட்டங்களுக்கும் குறைவான நிதியே வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு, நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் செய்து வருவதாக ரயில்வே நிர்வாகம் குற்றச்சாட்டி வருகிறது. இருப்பினும், புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு போதிய நிதியும் ஒதுக்காதது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் நடை பெறும் திட்டங்களுக்கு, ஒன்றிய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ள நிதி விபரங்களை கேட்டுள்ளார்.

அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 870.78 கி.மீ. தொலைவுக்கு 10 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு, நடப்பு பட்ஜெட்டில் ரூ.497.57 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய பட்ஜெட்டை ஒப்பிடுகையில், 19.48 சதவீதம் குறைவாக இருக்கிறது.

பல்வேறு புதிய பாதை திட்டங்களுக்கு நிதி குறைத்துள்ளது தெரியவந்தது. மேலும், திண்டிவனம் –- செஞ்சி -– திருவண்ணாமலை (70 கி.மீ.) அத்திப்பட்டு -– புத்தூர் (88.30 கி.மீ.), ஈரோடு -– பழனி (91.05 கி.மீ.), சென்னை -– மாமல்லபுரம் -– கடலுார் (179.28 கி.மீ.) ஆகிய புதிய பாதை திட்டங்களுக்கு தலா ஒரு ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

புதிய ரயில் பாதைகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.497.57 கோடியில் வெறும் இரண்டு திட்டங்கள் மட்டுமே மொத்த நிதியில் 87.4 சதவீதம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் இரட்டை பாதை-கூடுதல் பாதை திட்டங்கள் மிகக்கடுமையான நிதிச்சரிவை சந்தித்துள்ளன.

14 இரட்டைப்பாதை- கூடுதல் பாதை திட்டங்களின் (658.34 கி.மீ.) மொத்த மதிப்பீடு ரூ.8,173.35 கோடி. ஆனால், 2026-2027ஆம் நிதியாண்டில் வெறும் ரூ.324.10 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

காட்பாடி – விழுப்புரம், சேலம் – கரூர் – திண்டுக்கல், ஈரோடு – கரூர் ஆகிய 3 முக்கிய திட்டங்களுக்கான நிதி ரூ.400.45 கோடியில் இருந்து ரூ.12 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.திட்டத்துக்கான நிதி குறைக்கப்பட் டுள்ளதால், புதிய, இரட்டைபாதை பணிகள் பின்னடைவை சந்தித் துள்ளன.

இது குறித்து, சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறுகையில், “தமிழ்நாட்டில் ரயில் பாதை அமைக்கும் பணிகளில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதில், 20 ஆண்டுகளை இழந்து விட்டோம். இனியும் தாமதிக்கக் கூடாது. தமிழ் நாட்டின் ரயில்வே உட்கட்டமைப்பு வளர்ச்சியை ஏற்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *