தீங்கு செய்த தீபாவளி பட்டாசு வெடித்ததில் நான்கு குழந்தைகளுக்கு கண்கள் அகற்றம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மதுரை, நவ.7- தீபாவளியன்று பட்டாசு வெடித்ததில் கண்களில் பாதிப்பு ஏற்பட்டு, 4 குழந்தைகளுக்கு கண்கள் அகற்றப்பட்டுள்ளன.

மதுரையில் தீபாவளியின்போது பட்டாசு வெடித்ததில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் கண் சார்ந்த பாதிப்புகளும் உள்ளன. இதில் 4 குழந்தைகளுக்கு கண் அகற்றப்படும் நிலை ஏற்பட்டு இருப்பதாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தெரி வித்துள்ளது.

தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட கண் பாதிப்பு தொடர்பாக மொத்தம் 104 பேர் சிகிச்சைக்கு அந்த மருத்துவமனைக்கு வந்தனர்.

கண்கள் அகற்றம்

அவர்களுக்குப் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் 4 குழந்தைகளுக்கு முற்றி லும் கண் பாதிப்பு ஏற்பட்டு கண்கள் அகற்றப்பட்டுள்ளன என அந்த மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *