

திருச்சி, செப்.9- 9ஆம் வகுப்பு மாணவி எம்.யூ.வைஷ்ணவி கராத்தே (3rd Dojo Karate Championship Bodhi Dharmar) போட்டியில் 3ஆம் இடம் பெற்று கோப்பையையும், பதக்கத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
9ஆம் வகுப்பு எஸ்.நிவேதிதா, மாவட்ட அளவிலான Open கராத்தே வாகையர் பட்டப் (Championship) போட்டியில் குமைட் (Kumite)இல் முதல் பரிசையும், கலர் பெல்ட் (Colour Belt)இல் 3ஆம் பரிசையும் பெற்று கோப்பையையும், சான்றிதழையும் வென்றார்.
10ஆம் வகுப்பு மாணவி எஸ்.இனியாள், அபாகஸ் (RB Book of World Records – International World Record Certificate Abacus) போட்டியில் 5,55,000 கேள்விகளுக்கு 35 நிமிடத்தில் தீர்வு கண்டு சாதனைப்படைத்து கோப்பையையும், சான்றிதழையும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இம்மாணவிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.
