தீண்டாமைச் சடங்கு செய்​தவர்​கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லையே, ஏன்? ஜே.பி.நட்டாவுக்கு கார்கே கடிதம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, செப்.4  உத்த​ராகண்ட் மாநிலம் ஹல்த்​வானி​யில் உள்ள ராம்​லீலா மைதானத்​தில் கடந்த மாதம் 8 ஆம் தேதி நடை​பெற்ற பொதுக்​கூட்டத்தில் காங்​கிரஸ் தேசியத் தலைவர் மல்​லி​கார்​ஜுன கார்கே பங்​கேற்​றார்.

அதனைத் தொடர்ந்து 10 ஆம் தேதி அந்த மைதானத்​தில் வலது​சாரி அமைப்​பினர் மற்​றும் பாஜக-ஆர்​எஸ்​எஸ் ஆதர​வாளர்கள் ‘புனித’ப்படுத்துகிறோம் என்கிற பெயரில் ‘சுத்​தி​கரிப்​பு’  சடங்​கு​களை மேற்​கொண்​ட​தாகக் குற்​றச்​சாட்டு எழுந்​தது.

கார்கே கடிதம்!

இந்​நிலை​யில், இந்த விவ​காரம் தொடர்​பாக மாநிலங்​களவை தலை​வரும், ஒன்றிய அமைச்​சரு​மான ஜே.பி. நட்​டாவுக்கு கார்கே கடிதம் எழுதியுள்​ளார்.

அதில் அவர் கூறி​யுள்​ள​தாவது:

ஹல்த்​வானி​யில் நடை​பெற்ற சம்​பவத்தை நாடாளு​மன்​றத்​தில் நான் கூறிய​போது, கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என உறுதியளித்தீர்​கள்.

ஆனால், சம்​பவம் நடந்து 24 நாட்​கள் கடந்தும், இது​வரை முதல் தகவல் அறிக்கை (எப்​அய்ஆர்) கூட பதிவு செய்​யப்​பட​வில்​லை. இந்த சுத்திகரிப்பு நடை​முறை நேரடி​யாக தீண்​டா​மை​யுடன் தொடர்​புடையது.

அறி​வுறுத்தவேண்டும்!

இதில் தொடர்​புடைய நபர்​கள் மற்​றும் அமைப்​பு​கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்​தர​காண்ட் முத லமைச்சருக்கு நீங்​கள் அறி​வுறுத்த வேண்டும்.

இவ்​வாறு அதில் குறிப்​பிட்​டுள்​ளார்.

இதனிடையே, நேற்று (3.9.2026) செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, பிரதமர் மோடியும், ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவும் இந்த விவகாரத்தில் மவுனமாக இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *