சென்னை, செப்.3 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ‘இஓஎஸ்-05’-அய் சுமந்தபடி ‘ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட்’ வெள்ளிக்கிழமை (செப். 4) அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதையொட்டி, சிறீஅரிகோட்டா சதீஷ் தவன் விண்வெளி மய்யத்தின் 2-ஆவது ஏவுதளத்தில் ராக்கெட் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஏவுதலுக்கான இறுதிகட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
