3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை ஏற்கத் தயார் மியான்மர் அறிவிப்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ராகினே, ஆக. 18- மியான்மரில் கடந்த 2017ஆம் ஆண்டு ராணுவம் நடத்திய ஒடுக்குமுறை காரணமாக, லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் பக்கத்து நாடான வங்காளதேசத்திற்கு தப்பியோடி முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், வங்காளதேசம் வழங்கிய பட்டியலின்படி முதற் கட்டமாக 3 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் மியான்மரின் ராகினே மாகாணத்தைச் சேர்ந்த வர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மியான்மர் அரசு தெரி வித்துள்ளது.

அங்கு நிலவும் பாதுகாப்பு சூழல் சீரடைந்தவுடன், இந்த 3 லட்சம் அகதிகளையும் மியான்மர் மீண்டும் தனது நாட்டிற்குள் அனுமதிக்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

பயங்கரவாத பின்னணி கொண்ட சிலர் தவிர, மற்றவர்களை படிப்படியாக தாய் நாட்டிற்கு அழைத்து வர வங்காளதேசத்துடன் இணைந்து மியான்மர் அரசு தீவிரமாகப் பணி யாற்றி வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *