பாஜக ஆளும் திரிபுராவில் உள்ள கல்யாண்பூர் நகர காவல் நிலையத்திற்கு உள்பட்ட பங்பர் கிராமத்தைச் சேர்ந்த ஜலீலுர் ரஹ்மான்(46)என்ற மாட்டு வியா பாரி கிலதாளி சந்தையில் 2 மாடு களை விலைக்கு வாங்கினார். ஜலீலுர் ரஹ்மான் தனது சொந்த ஊருக்கு மாடுகளைக் கொண்டு வரும் போது ஆர்எஸ்எஸ் – பாஜக இந்துத்துவா குண்டர்கள் கை, கால்களை கட்டிப்போட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொலைவெறித் தாக்குதலில் ரஹ்மான் அங்கேயே சரிந்து விழுந்துள்ளார். அந்த நிலையிலும், ரஹ்மான் எப்படியோ தனது குடும்பத்தினருக்குத் தொலைபேசி மூலம் அழைத்து தான் தாக்கப்பட்டு உள்ளதைக் கூறியுள்ளார்.
ஆனால், குடும்பத்தினர் வரு வதற்குள் ரஹ்மான் பரிதாபமாக உயிரிழந்தார். கல்யாண்பூர் காவல் நிலையத்தில் இந்தச் சம்பவம் தொடர்பாக எப்அய்ஆர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. யாரும் கைது செய்யப்படவில்லை.
மாட்டுத் திருட்டு என்று குற்றச்சாட்டால்தான் ஜலீலுர் ரஹ்மான் தாக்குதலுக்கு உள்ள னர் என கல்யாண்பூர் காவல்துறை யினர் கூறியுள்ளனர். ஆனால், இதனைக் குடும்பத்தினர் மறுத்துள்ள னர். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் கூறுகை யில்,“ரஹ்மான் மாடுகளைத் திருட வில்லை. அவர் விவசாயி அனுகூல் தேப்நாத்திடம் இருந்து 2 மாடுகளை வாங்கினார்.இது தெரியாமல் அவரை அடித்துக் கொன்றுவிட்டனர்” என கண்ணீருடன் குற்றம்சாட்டியுள்ளனர்.
