மும்பை, ஆக.9 மகாராட்டிரா மாநிலத்தில் ஆதிவாசி அதிகார ராஷ்ட்ரிய மஞ்ச் (AARM) நடத்தியதொடர் போராட்டம் வெற்றி யடைந்துள்ளது. பழங்குடியினர் வாழும் (அய்ந்தாம் அட்டவணைப்) பகுதிகளில் உள்ள கிராம சபைகளுக்கு சுய-ஆட்சி உரிமை களை வழங்கவும், அவர்களின் மரபு மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் 1996 ஆம் ஆண்டு பெசா (PESA – Panchayat Extension to Scheduled Areas) சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி, கிராம சபைகளுக்கே முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.இத்தகைய முக்கியமான பெசாகிராம சபை ஒருங்கிணைப்பாளர் களின் எண்ணிக்கையை குறைக்கும்வகையில் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை பாஜக அரசு வெட்டியது. மேலும் 3 கிராமங்களுக்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் மட்டுமே இயங்க வேண்டும் எனவும் அம்மாநில அரசு அர சாணை வெளியிட்டது.
இதன் காரணமாக சுமார் 3,000 பெசா கிராம சபா ஒருங்கிணைப்பாளர்களில் 2,000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இம்முடிவை எதிர்த்து ஆதிவாசி அதிகார ராஷ்ட்ரிய மஞ்ச் (AARM) மற்றும் பெசா ஒருங்கிணைப்பாளர்கள் போராட்டக் குழு இணைந்து மாநிலம்தழுவிய அளவில் தீவிர போராட்டத்தை முன்னெடுத்தன.
மே 6 அன்று புனேவில் நூற்றுக்கணக்கா னோர் போராட்டம் நடத்தினர், அதைத் தொடர்ந்து ஜூலை ஒரு அன்று கனமழை பெய்த போதும் மும்பையின் ஆசாத் மைதானத்தில் அரசியல் அமைப்புச் சட்டப்படி தங்களின் வேலை உறுதிமற்றும் பாதுகாப்பு உரிமைகள் கேட்டு 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது. மேலும் ஆகஸ்ட் 4 முதல் காலவரையற்ற தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் 5 அன்று ஆதி வாசி அதிகார ராஷ்ட்ரியமஞ்ச் மற்றும் பெசா ஒருங்கிணைப்பாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகளுடன் மகாராட்டிரா அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. மகாராட்டிர பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்டாக்டர் அசோக் உய்கே மற்றும் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்குமார் கோரே ஆகியோர் கடந்த காலத்தை போலவே ஒவ்வொரு பெசா கிராம பஞ்சாயத்திலும் ஒரு ஒருங்கிணைப்பாளர் வீதம் அனைத்து 3,000 பணியிடங்களும் தக்கவைக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
அதேபோல அனைத்துப் பணியிடங்க ளுக்கும் போதுமான அளவு நிதியைப் பெற ஒன்றிய அரசுடன் மாநில அரசு தீவிரமாகப் பேசி வருவதாகவும், அந்த முயற்சிகள் வெற்றிபெறும் வரை, மாநில பழங்குடியினர் நலத்துறையே இந்த தேவையான நிதி ஏற்பாடுகளைச் செய்யும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். ஆதிவாசி அதிகார ராஷ்ட்ரிய மஞ்ச் தலை வர்கள் அசோக் தாவ்லே, மரியம்தாவ்லே, டாக்டர் அஜித் நவாலே,சட்டமன்ற உறுப்பினர் வினோத்நிகோலே உள்ளிட்ட தலைவர்களும் அக்கூட்டத்தில் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பெசா ஒருங்கிணைப்பாளர்களாக பணி யாற்றுபவர்களில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் பெண்களாவார்கள். தற்போதைய பெரும் போராட்டமானது பழங்குடியின மக்க ளின் குறிப்பாக பழங்குடியின பெண்களின் வேலையைபாதுகாத்துள்ளது. மேலும் பெசா சட்டத்தின் அமலாக்கம் பங்குடியின மக்களின் சுய ஆட்சிக்கான சுயமரியாதை மற்றும் அரசியலமைப்புச் சட்ட உரிமையையும் பாதுகாத்துள்ளது.தற்போது போராட்டம் வெற்றிபெற்றுள்ளது, ஆனால் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என போராட்டக்குழு கூறியுள்ளது.
