உசிலம்பட்டி அருகே தாழ்த்தப்பட்ட சிறுமி தற்கொலை உரிய நடவடிக்கை தேவை கனிமொழி எம்.பி. கோரிக்கை

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

உசிலம்பட்டி, ஆக.31 உசிலம்பட்டி அருகே தாழ்த்தப்பட்ட சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவிப்பதாவது:

“உசிலம்பட்டி அருகே 16 வயது தாழ்த் தப்பட்ட சிறுமி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது. தனது எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் பள்ளிச் சேர்க்கைக்காகச் சென்ற அந்தச் சிறுமி, அங்கு அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மனவேதனையில் அச்சிறுமி உயிரை மாய்த்துக்கொண்டதால் அவரது குடும்பம் நிலை குலைந்துபோயுள்ளது.

ஒவ்வொரு குழந்தைக்கும் மரியாதையும், கண்ணியமும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது அவர்களின் அடிப்படை உரிமையாகும். இதுபோன்ற மனவேதனைக்கு எந்தக் குழந்தையும் தள்ளப்படக் கூடாது.

இந்த நிகழ்வு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கி, நீதி நிலைநாட்டப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என அவர் பதிவிட்டுள்ளார்.

கார்கே பங்கேற்ற கூட்டத்திற்கு பின் சுத்திகரிப்பு

பிஜேபிமீது வழக்குப் பதிவு செய்ய ராகுல் வலியுறுத்தல்

புதுடில்லி, ஆக.31 உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த 8ஆம் தேதி பங்கேற்ற கூட்டத்திற்கு பிறகு பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் நடத்திய சுத்திகரிப்பு சடங்குகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் 29.8.2026 அன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற கூட்டம் முடிந்த பிறகு, சுத்திகரிப்பு செய்த சம்பவம் நடந்து 20 நாள்கள் கடந்தும் பாஜக அரசு எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காக்கிறது. ‘சுத்திகரிப்பு’ என்ற பெயரில் நடத்தப்படும் இத்தகைய சடங்குகள் தீண்டாமையின் மற்றொரு வடிவமே தவிர வேறில்லை.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்ட போதி லும், பாஜகவினர் அதனை இன்றும் தீவிரமாகப் பின்பற்றி வருகின்றனர். நமது அரசியல மைப்புச் சட்டத்துக்கும் பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிற்போக்கு சிந்தனைக்கும் இடையே நடைபெறும் இந்த கருத்தியல் போரில் காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.

பிரதமர் மோடி தன்னை அனைவருக்கும் பொதுவானவர் எனக் கூறிக்கொள்ளும் நிலையில், உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் இச்செயலை நியாயப்படுத்திப் பேசுகிறார். பட்டியலினத்தவர் மரியாதை யுடனும் வளமாகவும் வாழ்வதை பாஜக விரும் புவதில்லை என்பதையே இது காட்டுகிறது.

எனவே, இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *