தேர்தல் ஆணைய நடத்தை விதிகளைத் திரும்பப் பெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

சென்னை, மே 07 தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அரசு புதிய திட்டங்களை அறிவிக்கவும், வழக்கமான நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் இனி எந்தத் தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த ஏப்.23இல் நடைபெற்றது. இதற்கான அறிவிப்பு, மார்ச் 15இல் வெளியானது. அப்போது முதலே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. மாவட்டத்தில் எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் நடைபெற்றன. வி.ஏ.ஓ.க்கள் முதல், தாசில்தார்கள், துணை ஆட்சியர் நிலையிலான அதிகாரிகள், ஆட்சியர் வரையிலான வருவாய்த்துறையினர் மற்றும் அனைத்து அரசு துறையினரும் வழக்கமான பணிகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, முழு வீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.

தொகுதிவாரியாக ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்துவது, வேட்பு மனுக்கள் பெறுவது, பரிசீலனை செய்வது, தேர்தல் பொருட்கள், படிவங்களை தருவித்து, அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பிவைப்பது, இ.வி.எம், இயந்திரங்களை தயார்படுத்துவது, வாக்காளர் மத்தியில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது,  ஓட்டுப்பதிவு நாள் பணிகள் என. இரவு பகல் பாராமல், விடுப்பு இன்றி தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *