அரசு போக்குவரத்து கழகங்களில் தொழிற்பயிற்சி: அக்டோபர் 18 வரை விண்ணப்பிக்கலாம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, அக்.14- போக்குவரத்துக் கழகங்களில் ஊக்கத் தொகையுடன் வழங்கப்படும் தொழிற்ப யிற்சியில் பங்கேற்க அக்.18ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிரு ப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் விழுப்புரம். கும்ப கோணம், மதுரை. திருநெல்வேலி, எம்டிசி, எஸ்இடிசி ஆகிய மண்டலங் களில் தொழிற்பயிற்சி பெற விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொறி யியல் பட்டப் படிப்பு முடித்தவர் களுக்கு 458 காலியிடங்களும், பட் டயப் படிப்பு முடித்தவர்களுக்கு 561 காலியிடங்களும், கலை, அறிவியலில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு 569 காலியிடங்களும் உள்ளன. 2021 முதல் 2025ஆம் ஆண்டு வரை பட்டப் படிப்பை முடித்தவர் கள் இந்த பயிற்சிக்கு க்கு விண்ணப்பிக் கலாம். பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும். தேர்வு முறை யில் இட ஒதுக்கீடு வழங்கப்படும். மேலும், விவரங்களை hlips://nals. education.gov.in/ என்ற இணையதளத் தில் தெரிந்து கொள்ளலாம். தகுதியும் விருப்பமும் உடையவர்கள் அக்.18ஆம் தேதிக்குள் மேற்கூறிய இணையதளத் தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *