மகாராட்டிரம்: கடந்த 2 ஆண்டுகளில் உறைவிடப் பள்ளிகளில் 584 மாணவர்கள் உயிரிழப்பு!

சிறப்பு புத்தக சலுகைகள்

காங்கிரஸ் கடும் விமர்சனம்

மும்பை, ஆக.16 மகாராட்டிர மாநிலத் தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரமப் (உறைவிட) பள்ளிகளில் கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 584 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

அண்மையில் கட்சிரோலி பகுதியில் பாம்புக் கடித்து 3 பழங்குடியின மாண விகள் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, உறைவிடப் பள்ளிகளில் போதிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வசதிகள் இல்லாத பட்சத்தில் அவற்றின் உரிமங் களை நிரந்தரமாக ரத்து செய்யவும், அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்புத் தணிக்கை மேற்கொள்ளவும் மகாராட்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

மொத்த உயிரிழப்பு: 2024 முதல் 2026 வரையிலான 730 நாட்களில் மொத்தம் 584 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தினசரி சராசரி: இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 0.8 (கிட்டத்தட்ட ஒரு மாணவர்) உயிரிழந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பள்ளிகள் வாரியாக: அரசு ஆசிரமப் பள்ளிகளில் 384 மாணவர்களும், அரசு உதவிபெறும் ஆசிரமப் பள்ளிகளில் 200 மாணவர்களும் உயிரிழந்துள்ளனர்.

முக்கியக் காரணங்கள்: பாம்புக் கடி, கடுமையான ரத்த சோகை, விபத் துகள் மற்றும் தற்கொலை போன்ற பல்வேறு காரணங்களால் இந்த உயிரி ழப்புகள் நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இந்த அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், மாநிலத்தின் பாஜக கூட்டணி அரசின் நிர்வாக அலட்சியமும் ஊழலுமே மாணவர்களின் இந்தத் தொடர் உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து விமர்சித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *