பஞ்சாபில் மீண்டும் தலைதூக்கும் பிரிவினைவாதம்!

சிறப்பு புத்தக சலுகைகள்

சண்டிகர், ஆக.16 முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கும் பஞ்சாபில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. முன்னாள் பிரதமர் இந்திராவின் கொலை சதி வலையில் குற்றஞ்சாட்டப்பட்டு, துாக்கிலிடப்பட்ட கெஹர் சிங். அவருடைய  மகன் சத்வந்த் சிங்.

இவர் தான் எங்கள் கட்சியின் பஸ்சி பதானா தொகுதி வேட்பாளர் என, அகாலிதளம் வாரிஸ் தே என்ற மாநில கட்சி அறிவித்துள்ளது. இது, பஞ்சாப் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அகாலிதளம் வாரிஸ் தே என்ற இந்த கட்சி, காலிஸ்தான் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் கட்சி. சீக்கிய மதத்திற்காகவும், பஞ்சாபின் உரிமைகளுக்காகவும், தியாகம் செய்ததாக கருதப்படும், குடும்பங்களின் வாரிசுகளுக்கு தேர்தலில் முன்னுரிமை அளிக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே, இந்திரா கொலை வழக்கில் துாக்கிலிடப்பட்ட கெஹர் சிங்கின் மகன் சத்வந்த் சிங்கிற்கு, பதேகர் சாஹிப்பின் பஸ்சி பதானா தொகுதியில் போட்டியிட, ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது.

காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் எப்படி இந்தியாவிற்குள் வந்தனர் என, உளவுத் துறை விசாரிக்கிறது. ஒரு காலத்தில், தீவிரவாதிகளின் பிடியில் இருந்த பஞ்சாப், இப்போது அமைதியாக உள்ளது. ஆனால், வரும் சட்டமன்றத் தேர்தல் இந்த அமைதியை சீர்குலைத்து விடுமோ என்ற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *