மாணவர்கள் போராட்டம் வெற்றி பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஜூலை 26 நீட் தேர்விற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிர மடைந்து வரும் நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று (25.7.2026) பதவி விலகினார்.

தேசிய அளவில் கடந்த 10 நாட்களாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பதவி விலக வலியுறுத்தி மாணவர்களின் போராட்டம் விரிவடைந்து வரும் சூழலில், பாதுகாப்பு காரணங்கள் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார்.

தொடர் போராட்டம்

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது பதவியை விட்டு விலக செய்ய வேண்டும் என டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு எதிர்க் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருவதால் போராட்டம் வலுவடைந்துள்ளது. மேலும், போராட்டக் களத்தில் காவல்துறையி னருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரண மாக இரு தரப்பிலும் காயங்களும் ஏற்பட்டுவருகின்றன.

பட்டினிப் போராட்டம்

இவ்விவகாரம் தொடர்பாக 20 நாட்களுக்கும் மேலாக பட்டினிப் போராட்டம் இருந்துவந்த சமூக போராளி சோனம் வாங்சுக், தனது பட்டினிப் போராட்டத்தை  நிறைவு செய்தார். ஒன்றிய அமைச் சர் ஜே.பி. நட்டா அவரைச் சந்தித்து மத்திய அரசு எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்ததை அடுத்து இந்தப் போராட்டத்தை அவர் முடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

உற்சாக முழக்கம்

தர்மேந்திர பிரதான் ராஜினாமா அறிவிப்பு வெளியானதையடுத்து, டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் உற்சாக முழக்கம் எழுப்பினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *