இடம் மாறிய தேசியக் கொடி வண்ணங்கள் பேச்சில் தடுமாற்றம் விமர்சனத்துக்கு உள்ளாகும் பிரதமர் மோடியின் சுதந்திர நாள் உரை

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.16 இந்தியாவில் 2009-2010ஆம் நிதியாண்டில் 25 லட்சம் மின்சார வாகனங்கள் விற்கப்பட்டதாக முதலில் தவறாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, உடனடியாக தன்னை திருத்திக் கொண்டு, அது 1.5 லட்சம் என்று கூறினார்.

தொடர்ந்து, 2025-2026 ஆம் ஆண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை 25 லட்சமாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார். ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் தளப் பதிவில், “நம்பிக்கையற்ற, பதற்றமான  நடுங்கும் நிலையில் உள்ள ஒரு பிரதமராக மோடி காட்சியளிக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.

பாக்கெட்டில் தேசியக் கொடி

பிரதமரின் பேச்சு மட்டுமின்றி, அவரது சட்டை பாக்கெட் மீது  தேசிய கொடியின் வண்ணத்தில்  முதலில் இருக்க வேண்டிய ஆரஞ்சு வண்ணம் கடைசியிலும், கடைசியில் இருக்க வேண்டிய பச்சை வண்ணம் முதலிலும் முன்னுக்குப் பின் இடம் வலம் மாறாக அடுக்கப்பட்டுள்ளது. இது அயர்லாந்து தேசியக் கொடியை ஒத்ததாக இருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா தனது எக்ஸ் பதிவில், ” பிரதமர் உருது மொழியில் மூவர்ணக் கொடியை அணிந்திருப்பது போல் தெரிகிறது. அல்லது இந்தியாவுக்குப் பதிலாக அயர்லாந்தின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறாரா எனத் தெரியவில்லை.”. என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். உருது மொழி இடமிருந்து வலமாக எழுதப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *