நீட் எதிர்ப்பு கூட்டியக்கத்தின் போராட்டத்திற்கு நேரில் சென்று கழகத் தோழர்கள் ஆதரவு

சிறப்பு புத்தக சலுகைகள்

‘நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் – தமிழ்நாடு’ சார்பில், ’நீட்’ விலக்குக் கோரி, திருவள்ளுவர் இல்லம் சின்மயா நகர், கோயம்பேடு முகவரியில் காலவரையற்ற பட்டினிப்போராட்டம் கடந்த 11 நாள்களாக நடைபெற்று வருகிறது. நேற்று (10.08.2026) மாலை 5 மணிக்கு, திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் போராட்டம் நடத்துகின்ற மாணவர்களை நேரில் சந்தித்து, பட்டினிப் போராட்டத்தைக் கைவிட்டு மற்ற அறவழிப்போராட்டங்களை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். உடன், மேற்கு சென்னை மாவட்டத் தலைவர் கரு.அண்ணாமலை, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாணவர் கழகத் தோழர்கள் சஞ்சய், நிலவன் மற்றும் உடுமலை வடிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *