‘நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் – தமிழ்நாடு’ சார்பில், ’நீட்’ விலக்குக் கோரி, திருவள்ளுவர் இல்லம் சின்மயா நகர், கோயம்பேடு முகவரியில் காலவரையற்ற பட்டினிப்போராட்டம் கடந்த 11 நாள்களாக நடைபெற்று வருகிறது. நேற்று (10.08.2026) மாலை 5 மணிக்கு, திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் போராட்டம் நடத்துகின்ற மாணவர்களை நேரில் சந்தித்து, பட்டினிப் போராட்டத்தைக் கைவிட்டு மற்ற அறவழிப்போராட்டங்களை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். உடன், மேற்கு சென்னை மாவட்டத் தலைவர் கரு.அண்ணாமலை, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாணவர் கழகத் தோழர்கள் சஞ்சய், நிலவன் மற்றும் உடுமலை வடிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
