டிரம்ப்-மோடி நட்பின் பலன் இதுதானா? இந்தியாவை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளும் அமெரிக்கா!

1 Min Read

வாசிங்டன், ஆக. 9- ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100% வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் முக்கிய மசோதாவிற்கு அமெரிக்க நாடாளுமன்ற மேலவை) ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க மேலவையில் குடிய ரசுத் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி) ஆகிய இருதரப்பு உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா 86–11 என்ற கணக்கில் நிறைவேற்றப்பட்டது.

ரஷ்யாவிடம் அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வாங் கும் இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, அங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய 5 நாடுகள் மீது 100% வரை கூடுதல் வரிகளை விதிக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவிற்கு கிடைக்கும் எண் ணெய் வருவாயைக் கட்டுப்படுத்தி, அந்நாட்டின் நிதி பலத்தையும் பொருளாதாரத்தையும் பலவீனப் படுத்துவதே இதன் பிரதான நோக்க மாகும்.  அடுத்தகட்ட நடவடிக்கை  இந்த மசோதா அமெரிக்க அதி பருக்கு வரிகளை அமல்படுத்தும் அதிகாரத்தை வழங்குகிறது.  சட்ட வடிவம் பெறுவதற்காக இம்மசோதா அடுத்த கட்டமாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது

ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியது முதல், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், உள்நாட்டு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண் ணெயை இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது.  அமெரிக்காவின் இந்த புதிய நகர்வு இந்தியாவின் ஜவுளி, ரத்தினக் கற்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மருந்துகள் மற்றும் தகவல் தொழில் நுட்பப் பொருட்களின் அமெரிக்க ஏற்றுமதியைப் கடுமையாகப் பாதிக் கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த வர்த்தக அழுத்தங்கள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகம் நிலை மையை தீவிரமாக உற்றுநோக்கி வரு கின்றனவாம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *