ஆப்பிரிக்காவின் காங்கோ, உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் அதிகம் உலக சுகாதார அமைப்பு

உகாண்டா, மே 24– ஆப்பிரிக் காவின் காங்கோ, உகாண்டா நாடுகளில் எபோலா வைரஸ் தொற்று அபாயம் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதேநேரத்தில் உலக அளவில் தொற்று குறைவாகவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயெசஸ் வெளியிட்டுள்ள காணொலியில், “காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையை கடந்த 17.5.2026 அன்று நான் அறிவித்தேன். அவசரநிலைக் குழு கூட்டத்தை கூட்டுவதற்கு முன்பாக தலைமை இயக்குநர் அறிவிப்பது இதுவே முதல்முறை. பன்னாட்டு சுகாதார வழிமுறைகள் சட்டம் 12இன் கீழ் இந்த நடவடிக்கையை நான் எடுத்தேன்.

காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளின் சுகாதார அமைச்சர் களுடனான ஆலோசனைகளுக்கப் பிறகு தேவையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை இது.

எபோலா தொற்றால் அவசர நிலை சூழல் ஏற்படவில்லை என் பதில் நான் உறுதியாக உள்ளேன். அறிவிப்பை அடுத்து அவசரநிலைக் குழு கூட்டத்தை நேற்று நான் கூட்டினேன். பன்னாட்டு முக் கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையை அந்த குழு ஏற்றது. ஆனால், தொற்றுக்கான அவசரநிலை இல்லை என்பதையும் அது ஏற்றது. உலக சுகாதார அமைப்பின் ஆய்வில், எபோலா தொற்று பிராந்திய மற்றும் தேசிய அளவில் அதிகமாக உள்ளது. ஆனால், உலக அளவில் இது குறை வாகவே உள்ளது.

காங்கோவின் வடக்கு மாகா ணங்களான இத்துரி மற்றும் வடக்கு கிவு ஆகியவற்றில் இதுவரை 51 எபோலா பாதிப்புகள் உறுதி செய் யப்பட்டுள்ளன. உகாண்டாவில் இரண்டு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. எபோலா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் (அதாவது உயிரோடு உள்ளவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள்) எண்ணிக்கை 600 ஆக உள்ளது.

எபோலா பரவலைத் தடுப்பதற்கான பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன. எபோலா பாதிப்பு குறைந்தது இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என்று காங்கோவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார். இதைக் கருத்தில் கொண்டே மேற்கண்ட அபாய மதிப்பீடு வெளியிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *