வாசிங்டன், ஆக. 6- அமெரிக்காவின் பிரபல ‘ஸ்பேஸ் எக்ஸ்’ (SpaceX) நிறுவனத்திற்குச் சொந்தமான ‘ஃபால்கன் 9’ ராக்கெட்டின் மேல் பகுதி, கட்டுப்பாட்டை இழந்து நிலவின் மேற்பரப்பில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளியில் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி சுற்றித் திரிந்த இந்த ராக்கெட் கழிவு, நிலவின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு மணிக்கு சுமார் 8,700 கிலோமீட்டர் அதிவேகத்தில் நிலவின் பின்பகுதியில் சென்று மோதியுள்ளது.
விண்வெளியில் மிதந்து கொண்டிருந்த ராக்கெட்டின் மேல் பகுதி, கற்பனைக்கு எட்டாத வேகத்தில் நிலவின் தரைப்பகுதியை பலமாகத் தாக்கியது. இந்த தீவிர மோதலின் காரணமாக, நிலவின் மேற்பரப்பில் சுமார் 30 மீட்டர் (சுமார் 100 அடி) விட்டம் கொண்ட புதிய பள்ளம் உருவாக் கப்பட்டுள்ளது.
மனிதனால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் அல்லது ராக்கெட் பாகம் ஒன்று, தற்செயலாக நிலவில் போய் மோதுவது இதுவே முதல் முறை என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“விண்வெளியில் கைவிடப்படும் கழிவுகள் எதிர்காலத்தில் பிற கோள் களுக்கும், நிலவிற்கும் எவ்வாறு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு தெளிவான எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
இந்த மோதல் நிலவின் பின்பகுதி யில் நடந்துள்ளதால், பூமியில் உள்ள தொலைநோக்கிகளால் இதனை நேரடியாகப் பார்க்க முடியவில்லை. இருப்பினும், நிலவைச் சுற்றி வரும் ஆய்வுச் செயற்கைக்கோள்கள் மூலம் இச்சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் கூடுதல் தரவுகள் சேகரிக் கப்பட்டு வருகின்றன.
எதிர்காலத்தில் விண்வெளியில் குடியேறத் திட்டமிடும் மனிதகுலத் திற்கு, நிலவும் விண்வெளி கழிவு களும் ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது என்பதை இந் நிகழ்வு உணர்த்துகிறது.
