படிக்கும் மாணவர்கள் – கோயிலுக்குப் பாத யாத்திரையாம்! எங்கே? பிஜேபி சாமியார் ஆளும் உத்தரப்பிரதேசத்தில்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

உத்தரப் பிரதேசம், ஆக.6 வட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், அரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் ‘காவடி யாத்திரை’ விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த யாத்திரையின் போது தங்கள் ஊர் நீர்நிலைகளில் இருந்து தண்ணீரை எடுத்துக்கொண்டு, வெறும் காலால் நடந்து சென்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அரித்வாரில் இருக்கும் சிவன் கோவிலில் ஊற்றி வழிபடுவார்கள். பின்னர், அங்கிருந்து கங்கை நீரைக் கொண்டுவந்து தங்கள் சொந்த ஊரில் உள்ள சிவன் கோவில்களில் ஊற்றிப் பிரார்த்தனையை நிறைவு செய்வார்கள்.

இந்த ஆண்டு காவடி யாத்தி ரையை முன்னிட்டு, உத்தரப் பிரதேச அரசு பள்ளி மற்றும் கல்லூ ரிகளுக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது.

காலில் செருப்பு இன்றி 400 கி.மீ பயணம்

இந்த விடுமுறைக் காலத்தில், பள்ளிச் சிறுவர்கள் சிலர் காவடி யாத்திரையில் பங்கேற்று வரும் காட்சி சமூகத்தில் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பள்ளிச் சிறுவர்கள், தங்களின் வழக்கமான புத்தகப் பைகளில் கங்கை நீரை அடைத்துக் கொண்டு, காலில் செருப்புக் கூட இல்லாமல், கால்களில் சலங்கையைக் கட்டிக்கொண்டு சுமார் 400 கிலோமீட்டர் தூரம் கால்நடையாகவே பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளிக்கூடப் புத்தகங்களைச் சுமக்க வேண்டிய இளம் வயதில், பக்தி என்ற பெயரிலும் பாரம்பரியம் என்ற வழக்கத்தாலும் சிறுவர்கள் இத்தனை நீண்ட தூரம் நடப்பது பொதுமக்களிடையே வேதனையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *