சென்னை, ஆக.5- நடிகர் பார்த்திபன் தொடர்ந்த பொது நல வழக்கில், தமிழ்நாடு அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் பார்த்திபன் அண்மையில் ‘ஜாதி மதம் அற்றவர்’ (No Caste, No Religion) என்ற சான்றிதழைப் பெற்றிருந்த நிலையில் பொதுமக்களும் இத்தகைய சான்றிதழ்களை எளிதில் பெறுவதற்கு ஏதுவாக உரிய சட்டம் அல்லது அரசாணை வெளியிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாமதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது, இந்த மனு தொடர்பாக உள்துறை, வருவாய்த்துறை மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தர விட்டு விசாரணையை நீதிமன்றம் தள்ளிவைத்தது.
