சிகரெட்டை விட அபாயம் இதனால் 13 வகை கேன்சர் வரலாம்!

1 Min Read

சிகரெட், மது காரணமாக புற்றுநோய் வருவது தெரிந்ததே. ஆனால், உடல் பருமனாக இருப்பதால், 13 வகையான புற்றுநோய் வரும் என்பது தெரியுமா? மார்பகம், பெருங்குடல், எண்டோமெட்ரியம் (கருப்பையின் உட்புற திசு), உணவுக்குழாய், பித்தப்பை, இரைப்பை, சிறுநீரகம், கல்லீரல், கருப்பை, கணைய, தைராய்டு, எலும்பு மஜ்ஜை மற்றும் மெனிங்கியோமா ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படலாம். ஆகவே உடல் எடையில் கவனம் தேவை.

வாக்குப்பதிவில்
பெண்களுக்கே வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகளவில் வாக்களித்து உள்ளனர். மொத்தம் 85.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், அதில் பெண் வாக்காளர்களில் 85.76% பேரும், ஆண் வாக்காளர்களில் 83.57 சதவீத பேரும் தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 2021 தேர்தலிலும், ஆண்களை விட பெண்களே அதிகளவில் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவில் சாதித்த
முதல் 10 தொகுதிகள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் தொகுதி தான் 93.38% வாக்குப்பதிவுடன் முதலிடம் வகிக்கிறது அதற்கு அடுத்த இடங்களை பிடித்த தொகுதிகள்: 2) வீரபாண்டி -93.37% 3)குளித்தலை -92.85% 4)குமாரபாளையம் -92.64% 5)பாலக்கோடு -92.57% 6)கிருஷ்ணராயபுரம் -92.49% 7)சங்ககிரி -92.49%, 8)பெருந்துறை -92.31% 9)மதுராந்தகம் -92.15% 10)திருப்பூர் தெற்கு -90.71 ஆகும். மாநிலத்தில் மொத்த வாக்குப்பதிவு 85.14% ஆகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *