போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எப்போது நீதி? மதுரையில் 774 வழக்குகள் நிலுவை; விரைவான நீதிக்காக காத்திருக்கும் அவலம்!

3 Min Read

மதுரை,ஆக.23- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடு மைகளைத் தடுக்கவும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு விரைவான நீதி வழங்கவும் 2012 ஆம் ஆண்டு போக்சோ (POCSO) சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், மதுரை மாவட்டத்தின் தற்போதைய புள்ளிவிபரங்கள், அந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமான விரைவான நீதி வழங்கும் நடைமுறை இன்னும் முழுமையாக எட்டப்படவில்லை என்பதைத் தீவிரமாகச் சுட்டிக்காட்டு கின்றன.

மதுரையில் மட்டும் 774 போக்சோ வழக்குகள் நிலுவை

கடந்த மே 31 ஆம் தேதி வரை யிலான நிலவரப்படி, மதுரை மாவட்டக் காவல்துறையின் தரவுகளின்படி, 2012 முதல் இதுவரை மொத்தம் 1,421 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 608 வழக்குகள் மட்டுமே முடி வடைந்துள்ள நிலையில், 774 வழக்குகள் நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளன. மேலும் 39 வழக்குகள் காவல்துறை விசாரணையில் உள்ளன. இதன்படி, பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு 10 வழக்குகளில் 5 முதல் 6 வழக்குகள் வரை நீதிமன்ற விசாரணைக்காகக் நீண்ட காலமாகக் காத்திருக்கின்றன.

மதுரை மாநகரப் பகுதியிலும் இதே போன்ற நிலையே நீடிக்கிறது. மாநகரக் காவல்துறையில் 2013 முதல்இதுவரை 1,062 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதில், 385 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. 73 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், 310 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட வர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள னர்.

அதிகரிக்கும் வழக்குகளும்– தீவிரமான குற்றங்களும்!

மதுரை மாவட்டத்தில் பதிவு செய்யப்படும் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக, 2022 முதல் 2026 மே மாதம் வரை பதிவு செய்யப்பட்ட வழக்கு களில் 614 வழக்குகள் ஊடு ருவும் பாலியல் வன்கொடுமை தொடர்பானவையாகும். 165 வழக்குகள் மட்டுமே ஊடுருவல் இல்லாத பாலியல் குற்றங்களாகப் பதிவாகியுள்ளன. அதாவது, பதிவு செய்யப்படும் நான்கு வழக்குகளில் மூன்றுக்கும் மேற்பட்டவை மிகவும் தீவிரமான பாலியல் வன்கொடுமை சம்பவங்களாக இருப்பது மிகுந்த கவலைக்கிடமான சூழலை ஏற்படுத்துகிறது.சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்பு களின் தொடர் தலையீடு மற்றும் விழிப்புணர்வு காரணமாகவே முன்பு வெளிவராத பல பாலியல் குற்றங்கள் தற்போது புகார்களாகப் பதிவு செய்யப்படுவதாகச் செயற்பாட்டா ளர்கள் தெரிவிக்கின்றனர்.

வழக்குகள் தேங்குவதற்கான காரணங்களும் சிக்கல்களும்

நீதிமன்றங்களில் நூற்றுக்க ணக்கான வழக்குகள் தேங்கிக் கிடப்ப தால், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இது அவர்களது குடும்பங்களுக்குப் பொருளாதார மற்றும் தீவிர மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும், காலப்போக்கில் சாட்சிகளின் நினைவாற்றல் பாதிக்கப்படுவதும், ஆதாரங்களின் வலிமை குறை வதும் குற்றவாளிகள் தப்பிச் செல்ல வழிவகுத்து விடுகிறது.விசாரணை தாமதமாவதற்கான கார ணங்களை ஆய்வு செய்தபோது, பின்வரும் நடைமுறைச் சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன:மருத்துவ அறிக்கைகள் மற்றும் தடயவியல் ஆய்வக அறிக்கைகள் தாமதமாகக் கிடைப்பது.டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் நிலுவையில் இருப்பது.வயது உறுதிப்படுத்தும் ஆவ ணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது.பி.என்.எஸ்.எஸ். சட்டப்பிரிவின் கீழ் வாக்குமூலம் பதிவு செய்யப்படாதது மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதில் ஏற்படும் சுணக்கம்.

விரைவான நீதிக்குத் தேவையான நடவடிக்கைகள்

பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளரும், சோகோ மனித உரிமை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநருமான வழக்கு ரைஞர் செல்வகோமதி கூறு கையில், “போக்சோ சட்டத்தின் முக்கியநோக்கம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விரைவான நீதி வழங்குவதும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகிடைப்பதும்தான்” என்றார். காவல்துறை, மருத்துவம், தடயவியல், கல்வித்துறை, சமூக நலத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் விரைவான நீதி சாத்தியமாகும் என்றும், குழந்தை களுக்கு உளவியல் ஆலோசனை மற்றும் மறுவாழ்வு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வல்லுநர்கள் பரிந்துரைக்கும் முக்கிய நடவடிக்கைகள்

போக்சோ வழக்குகளுக்கு காலக்கெடு அடிப்படையிலான கண்காணிப்பு முறை. தடயவியல் ஆய்வகங்களின் திறன் மற்றும் மனிதவளத்தை அதிகரித்தல்.விசாரணை அதிகாரிகளுக்குச் சிறப்புப் பயிற்சி வழங்குதல்.கூடுதல் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் நியமனம்.புள்ளிவிபரங்கள் வெறும் எண்கள் அல்ல; ஒவ்வொரு எண்ணுக்குப் பின்னாலும் ஒரு குழந்தையின் எதிர்காலமும், நீதிக்காகக் காத்திருக்கும் ஒரு சமூகத்தின் நம்பிக்கையும் அடங்கியுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், “நீதி கிடைப்பது” மட்டுமல்ல; “காலத்துக்குள் நீதி கிடைப்பதே” போக்சோ சட்டத்தின் உண்மையான வெற்றியாகஇருக்க முடியும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *