சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கப் பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.04- தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புரைகள், தீர்ப்பாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், அரசியலமைப்புச் சட்ட Article 348(2) மற்றும் ஆட்சி மொழிகள் சட்டம், 1963, பிரிவு 7 ஆகியவற்றின் கீழ் மாநில ஆளுநரால் அனுப்பப்படும் முன்மொழிவுகளின் மீது தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் உரையாற்றினார்.

தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசுகையில், “சென்னை உயர்நீதி மன்றத்தின் முதன்மை மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும். உயிரோடும் உணர் வோடும் ஒன்றிணைந்தது எனக் கருதுகிறோம்; சிறப்புமிக்க தமிழ் மொழியானது ஆட்சி, கல்வி, மாவட்ட நீதிமன்றங்களிலும் பயன் படுத்தப்பட்டு வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்திலும் தமிழை முதன்மை மொழியாக அறிவிப்பது காலத்தின் கட்டாயம்; மாநிலத்தின் ஆட்சி மொழியை உயர் நீதிமன்ற நடவடிக்கையில் பயன்படுத்த அதிகாரம் வழங்க முடியும்.

நீதிமன்ற தீர்ப்பு மற்றும் உத் தரவுகள் அனைத் தையும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தமிழில் மனுக்கள், ஆவணங்களை சமர்பிக்க உரிய நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்.

நீதிபதிகள், வழக்குரைஞர்கள், நீதிமன்ற பணியா ளர்களுக்கு சட்டத் தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மாவட்ட நீதி மன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக உள்ளது. வழக்கு தொடர்பான வாதங்கள் தமிழில் இருந்தால் எளிதாக புரியும். இந்த கோரிக்கை எந்த மொழிக்கும் எதிரானது அல்ல.

தமிழ் மொழிக்கான சட்ட அங்கீகாரம் கேட்கும் கோரிக்கை. குடியரசுத் தலைவரும், ஒன்றிய அரசும் இதற்கு ஒப்புதல் தர வேண்டும். இப்பேரவை ஒரு மனதாக இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை நிறைவேற்றி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக பயன்படுத்துவதற்கான நட வடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

இந்தத் தீர்மானம் மீது பல்வேறு கட்சி உறுப் பினர்களும் உரையாற்றிய பின்னர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *