100-அய் நெருங்கும் அசாம் வெள்ள உயிரிழப்பு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

100-அய் நெருங்கும்
அசாம் வெள்ள உயிரிழப்பு

வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது. பலர் காணாமல் போயுள் ளதால், அசாம் வெள்ள உயிரிழப்பு எண் ணிக்கை 100-அய் தாண்டலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அசாம் கனமழை வெள்ளம் தொடர் பாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று (26.7.2026)  வெளியிட்ட அறிக்கையில், ‘‘அசாம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிவசாகர் மாவட்டத்தில் 4 பேரும், சராய்தியோ மாவட்டத்தில் ஒருவரும் பலியானதைத் தொடர்ந்து மொத்த உயிரிழப்பு 66ஆக உயர்ந்துள்ளது. சிவ சாகர், சராய்தியோ, ஜோர்காட் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 6.54 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 810 கிரா மங்கள் நீரில் மூழ்கி 34,970.8 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *