பெங்களூருவில் குடிநீரை வீணடித்தால் ரூ.5,000 அபராதம்! குடிநீர் வாரியம் கடும் எச்சரிக்கை!

1 Min Read

பெங்களூரு, ஜூலை 6- மாநகரில் நிலவி வரும் ‘எல்நினோ’ தாக்கம், போதிய மழையின்மை மற்றும் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவது ஆகிய காரணங்களால் பல பகுதிகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அச்சம் எழுந்துள்ளது.

குடிநீர்

இதனைத் தடுக்கும் பொருட்டு, பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம் (BWSSB) குடிநீரை வீணாக்குவதற்கு எதிராக அதிரடியான தடை உத்தரவுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பிறப்பித்துள்ளது.

தடைகள்

நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் தற்காலிகமாக வந்து செல்பவர்கள் உட்பட பெங் களூருவின் சுமார் 1.4 கோடி மக்களுக்கும் சமமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வாரியம் பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளது. அதன்படி, வாகனங்களைக் கழுவுதல் மற்றும் தோட்டம் வளர்த்தல், கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைக் கட்டுமானப் பணிகள், அலங்கார நீரூற்றுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள்,  திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களின் அத்தியாவசியமற்ற தேவைகள், சாலைகளைச் சுத்தம் செய்தல் மற்றும் நீச்சல் குளங்களை நிரப்புதல் / பராமரித்தல் ஆகிய அத்தியாவசியமற்ற தேவைகளுக்குக் குடிநீரைப் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிரடி அபராதம்!

இந்தக் கட்டுப்பாடுகளை மீறி குடிநீரை வீணடிப்பவர்களுக்கு வாரி யம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

முதல்முறை விதிமீறலுக்கு சட்டப்பிரிவு 109இன் கீழ் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.

மீண்டும் விதிமீறலில் ஈடுபட் டால், ஆரம்ப அபராதத் தொகை யுடன் சேர்த்து, நாளொன்றுக்கு ரூ.500 வீதம் கூடுதல் அபராதம் வசூலிக்கப்படும்.

பெங்களூருவின் நீர் ஆதாரத்தைக் காக்க பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *