புதுடில்லி, ஜூலை 26- இந்தியாவில் ஒன்றிய அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு அய்க்கிய நாடுகள் சபை (UN) தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
போராட்டக்காரர்கள் மீதான வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்து அய்.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைதியான முறையில் போராடும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். கைது மற்றும் துன்புறுத்தல் அச்சமின்றி அவர்கள் தங்கள் குரலை எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அய்.நா செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். இந்த அறிக்கை, இந்தியாவின் ஜனநாயக மதிப்புகள் மற்றும் அடிப்படை உரிமைகளின் தற்போதைய நிலை குறித்து பன்னாட்டு சமூகத்தில் எழுந்துள்ள கவலையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
அய்.நா-வின் இந்தக் கண்டனத் தைத் தொடர்ந்து, ஒன்றிய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ள எதிர்க் கட்சித் தலைவர்கள், “ஒன்றிய அரசின் சர்வாதிகாரப் போக்கால் பன்னாட்டு அளவில் இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.
