கோயில்களில் ஊழல் தொடர்கதை சமயபுரம், வடபழனி கோயில்களில் ஊழியர்கள் இடைநீக்கம்!

சென்னை, ஜூலை 25– சொத்துக்குவிப்பு மற்றும் ஒழுங்கின்மை புகாரின் அடிப்படையில் சமயபுரம் மற்றும் வடபழனி கோயில் நிர்வாகிகள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தர விட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ரமேஷ் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோயிலுக்கும் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி அமைச்சர் ரமேஷ் வடபழனி முருகன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்தக் கோயிலில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்துள்ளது.

அதனால் அதுகுறித்து விசாரித்த அமைச்சர் அதற்குப் பொறுப்பு வடபழனி கோயில் இள நிலை உதவியாளர் அரி கோவிந்த் என்பதன் அடிப் படையில், அமைச்சர் உத்தரவின் பேரில் நிர்வாக ஒழுங்கின்மை என்ற காரணத்திற்காக இளநிலை உதவியாளர் அரி கோவிந்த் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

அதைப்போன்று திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் நிர்வாகப் பணிகளையும், கருவூலத்தையும் கவனித்து வந்தவர் மணியம் பழனி வேல் என்பவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புகார்கள் எழுந்தது.

இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதால் அதன் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின் பேரில் அவர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *