தமிழ்நாட்டில் எந்த வாக்குச் சாவடியிலும் மறுவாக்குப்பதிவுக்கான அவசியம் ஏற்படவில்லை! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

1 Min Read

சென்னை, ஏப்.25 தமிழ்நாட்டில் எந்த வாக்குச் சாவடியிலும் மறு வாக்குப்பதிவுக்கான அவசியம் ஏற்படவில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்திற்குக் கடந்த 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தலில் மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பா ளர்கள் களமிறங்கினர். தேர்த லுக்காக தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஒரு சில தொகுதிகளில் வாக்குப்பதிவின் போது சிறிய அளவிலான மோதல்கள் மற்றும் இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்ட தாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டத்தின் பூம்புகார் தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றில் தலைமைக் காவலர் ஒருவர் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்த இடங்களில் வாக்குப்பதிவு முறையாக நடைபெற்றதா என்பது குறித்துத் தேர்தல் ஆணையம் தீவிர மாக ஆய்வு செய்து வருகிறது.

இதேபோல், சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்களில் (EVM) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரண மாக வாக்குப்பதிவு நீண்ட நேரம் தடையானது. பின்னர் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது

75,064 வாக்குச்சாவடிகள் எதிலும்…

தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, சென்னையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பழுதடைந்த காகித மாதிரி இயந்திரம் ஒன்று இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதால், அங்கு மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலை யில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 75,064 வாக்குச்சாவடிகள் எதி லும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட வில்லை. எனவே, தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவு இல்லை என தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது.

இதே போல மேற்கு வங்க தேர்த லிலும் முதற்கட்ட வாக்குப்பதிவின் 44 ஆயிரத்து 376 வாக்குச்சாவடிகள் எதிலும் மறுவாக்குப்பதிவு பரிந்து ரைக்கப்படவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *