நீட் எதிர்ப்பு டில்லி போர்க்களமானது

1 Min Read

புதுடில்லி, ஜூலை 22– நீட் அசம்பாவிதத்திற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தற்கொலை செய்துகொண்ட மாணவர் களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் கொடுக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் அமைப்பினர் அமைதி வழியில் டில்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

கரப்பான்பூச்சி கட்சி யினர் மற்றும் மாணவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட பேரணி நடத்தினர். அவர்களை தடுக்கும் விதமாக டில்லி காவல்துறை கண் மூடித்தனமாக தடியடி நடத்தியது, கண்ணீர் புகைக்குண்டு வீசி மாண வர்களை கலைத்தது.

மாணவர்களும தர்மேந் திர பிரதான் பதவி விலகும் வரை ஓயமாட்டோம் என ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் மீதி டில்லி காவல்துறை நடத்திய தாக்குதலை கண்டித்தும், நீட் விவகாரத் தில் தர்மேந்திர பிரதான், மோடி, அமித்ஷா பதவி விலகவேண்டும் என்பதை வலியுறுத்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடு பட்டார்.

அமைதியாக போராட் டம் நடத்தி வந்த ராகுல் காந்தி மற்றும் கட்சியினரை திடீரென டில்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்யப்பட்டனர்.

தள்ளுமுள்ளுக்கு இடையே ராகுல் காந்தியின் மூக்கில் இருந்து ரத்தம் கசிந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராகுல் காந்தி உட்பட கைது செய்யப் பட்ட காங்கிரஸ் கட்சியினர் பின்னர் விடுவிக்கப் பட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *